கண்ணிமைக்காமல் பார்க்கும் அளவுக்கு உங்களுடைய அழகு மெருகேற இந்த காஃபி ஜெல் போதும்.

face2
- Advertisement -

சில பேருடைய அழகை பார்க்கும்போது நம்முடைய இமைகள் மூடி திறக்க கூட மறந்துவிடும். அந்த அளவிற்கு வியக்கத்தக்க அழகை கொண்டவர்களை நாம் பார்த்திருப்போம். செயற்கையான அழகை சொல்ல வரவில்லை. இயற்கையாகவே சில பேருடைய சருமம் அழகுதான். நம்முடைய சருமமும் பார்ப்பதற்கு ஜொலிஜெலிப்பாக கருந்திட்டுகள் இல்லாமல், கரும்புள்ளிகள் இல்லாமல் முகப்பரு இல்லாமல், கருவளையம் இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம். செலவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பலன் பெரியதாக கிடைக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அழகு குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருட்கள், வீட்டில் இருக்கும் இன்ஸ்டன்ட் காபி பவுடர், ஏலக்காய், கடையில் வாங்கிய ஆலோவேரா ஜெல். அலோவேரா ஜெல்லை பெர்ஃபியூம் இல்லாமல் கலர் இல்லாமல் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அது தான் சிறந்தது.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் காபி பவுடர், நன்றாக இடித்த 5 ஏலக்காய்களை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஏலக்காயின் வாசம் அந்த தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். மிதமான தீயில் ஏழு நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கூட போதும்.

1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் அளவு தண்ணீராக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் 2 ஸ்பூன் அலோவேரா ஜெல் போட்டு, இந்த வடிகட்டிய காபி தண்ணீரை ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். ஆலோவேரா ஜெல்லோடு இந்த தண்ணீர் சேரும்போது நமக்கு ஒரு ஜெல் கிடைக்கும். இதை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் பத்து நாட்கள் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை முதலில் சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். ஈரத்தை துவட்டி விடுங்கள். இப்போது இந்த நைட் க்ரீமை எடுத்து லேசாக முகத்தில் சிறு சிறு புள்ளிகளாக வைத்து நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஜெல்லை உங்களுடைய முகம் அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். இரண்டு நிமிடம் வரை மசாஜ் செய்தால் போதும். குறிப்பாக வாயை சுற்றி கருவளையம். கண்ணை சுற்றி கருவளையம் இருப்பவர்கள் இந்த ஜெல்லை, அந்த இடத்தில் கவனம் செலுத்தி நன்றாக இரண்டு முறை போட்டாலும் தவறு கிடையாது.

அவ்வளவு தான். ஜெல் முகத்தில் அப்ளை செய்தாகிவிட்டது. முகத்தை கழுவ வேண்டாம். அப்படியே தூங்க செல்லுங்கள். மறுநாள் காலை எப்போதும் போல உங்களுடைய முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஜெல்லை முயற்சி செய்து பார்த்துவிட்டு ரிசல்ட் என்ன என்பதை கண்ணாடி முன்பு நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தொடர்ந்து இந்த கிரீமை பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

- Advertisement -