அடிக்கின்ற வெயிலிலும் முகம் வெள்ளை வெளேரென்று பளிங்கு போல மின்ன வீட்டில் இருக்கும் காபி தூள் 1 ஸ்பூன் இருந்தால் போதுமே!

mugam
- Advertisement -

கோடை காலம் தொடங்கி விட்டது! இனி வரக்கூடிய நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விடும். இதனால் சருமத்தில் பல்வேறு விதமான பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி நாம் சந்திக்கும் சரும பாதிப்புகளில் இருந்து எளிதாக நம்மை பாதுகாத்துக் கொள்ள அதிகம் மெனக்கெட்டு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் காபித்தூள் எப்படி சருமத்தை பளிங்கு போல பளிச்சென வெள்ளை வெளேரென வைத்துக் கொள்ள உதவுகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பொதுவாக கோடை காலம் துவங்கி விட்டாலே, முகத்தில் வழியும் வியர்வை துளிகள் வழியே காற்றில் பரவும் மாசு, தூசு போன்றவை கலந்து நம் சருமத் துவாரத்திற்குள் சென்று முகப்பரு, கருமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த துவங்கும். சருமத்தில் கொலாஜன் அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்க கூடிய ஆற்றல் சர்க்கரை மற்றும் உப்பிற்கு உண்டு. சர்க்கரையுடன் உப்பு சேரும் பொழுது அல்லது தனித்தனியாக பயன்படுத்தும் போதும் நம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்கிறது.

- Advertisement -

அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை ஸ்பூன் உப்பு கலந்து சருமத்திற்கு 10 நிமிடம் மசாஜ் செய்யலாம். சக்கரையை ஸ்கிரப்பர் போல பயன்படுத்துவதற்கு முன்பு அதனை ஏதாவது ஒரு பொருளுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு சிறந்த பொருளாக இருக்கக் கூடிய ஒன்று தான் காபி தூள்! ஒரு ஸ்பூன் காபி தூளுடன், ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து லேசாக தண்ணீர் தொட்டு முகம் முழுவதும் அழுத்தம் கொடுக்காமல் பரபரவென தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 10 நிமிடம் தொடர்ந்து இது போல் எல்லா இடங்களிலும் செய்ய முகம் துவாரங்கள் இறுகி வியர்வை முகத் துவாரங்களுக்குள் செல்வதை தடுக்கும். முகத்தில் மெலனின் அதிகரித்து கருமையான தேகம் கூட நல்ல பளிச்சென்ற வெள்ளை வெளேரென பளிங்கு போல மின்ன ஆரம்பிக்கும். காபி தூளுக்கு பதிலாக உங்களிடம் பாதம் எண்ணெய் இருந்தால் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இது போல செய்யலாம். சர்க்கரைக்கு பதிலாக உப்பும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதில் இருக்கும் சொரசொரப்பு தன்மை உங்கள் தேகத்தில் உரசி இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை தூண்டி விட செய்யும். இதனால் முகத்தில் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் கூட நீங்கி முகம் நைசாக பளிச்சென மின்னும். இதை தினமும் செய்யக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இது போல பத்து நிமிடம் செய்தால் போதும்.

முகத்தில் எவ்வளவு வியர்வை வழிந்தாலும், அது முகத் துவாரங்களுக்குள் செல்லாமல் அங்கேயே தடை செய்துவிடும். இதனால் சரும பிரச்சினைகள், வெயிலினால் ஏற்படக்கூடிய கருமை போன்ற தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கும். எப்பொழுதும் முகம் வெள்ளை வெளேரென பளிங்கு போல மின்ன செய்யக் கூடிய இந்த குறிப்பை பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் தாராளமாக செய்யலாம். இதில் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது, மாறாக சருமம் இன்னும் மெருகேறும்.

- Advertisement -