நம்பவே முடியாத அளவுக்கு ஜொலி ஜொலிக்கும் சருமத்தைப் பெற, இதை மட்டும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க! உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்ற போகும் ‘மேஜிக் காபி ஜெல்’ எப்படி செய்வது?

face14

நம்முடைய முகம் மட்டும் அல்ல. கை, கால், கழுத்து பகுதி இப்படியாக நம் உடல் முழுவதும் வெள்ளையாக மாற்றுவதற்கு வித்தியாசமான முறையில் காபி பவுடரை வைத்து ஒரு ஜெல்லை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை ஒருமுறை போட்ட உடனேயே நல்ல ரிசல்டை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். மிகக்குறைந்த செலவில் நம் உடல் முழுவதையும் வெள்ளையாக மாற்ற சூப்பர் ரெமிடி உங்களுக்காக! இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? இதை நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம் வாங்க!

face4

முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேன் – 2 ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 2 ஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு – 2 ஸ்பூன், தக்காளி பழ சாறு – 2 ஸ்பூன், காபி பவுடர் – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த காபி லிக்விட் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை – 2 ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலக்கி விட வேண்டும். இப்போது சூட்டில் சர்க்கரை நன்றாக முழுமையாக கரைந்தது உங்களுக்கு சுகர் சிரப் கிடைத்திருக்கும். முதலில் பவுலில் தயார் செய்து வைத்திருக்கும் காபி லிக்விடை, சுகர் சிறப்போடு சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை மீண்டும் நன்றாகக் காய்ச்ச வேண்டும்.

coffee-cream

இந்த கலவையானது கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு நமக்கு கிடைக்கும். இதுதான் ‘மேஜிக் காபி ஜெல்’. இதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். நன்றாக ஆறிய பின்பு இந்த ஜெல்லை தொட்டு முகம், கை பகுதி, கால் பகுதி கழுத்து பகுதி, எந்த இடம் உங்களுக்கு வெள்ளையாக மாற வேண்டுமோ அந்த இடத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். (முகத்திற்கு மட்டும் தேவை என்றாலும், முகத்திற்கு மட்டும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். உடல் முழுவதும் தேவைப்பட்டால் உடல் முழுவதும் இதை அப்ளை செய்து கொள்ளலாம்.) 5 நிமிடங்கள் முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து, மேலும் 5 நிமிடங்கள், இந்த ஜெல்லை உங்களுடைய முகத்தில் அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின்பாக குளிர்ந்த தண்ணீரை வைத்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். ஒரு காட்டன் துண்டை சுடு தண்ணீரில் நனைத்து பிழிந்து சூடாக இருக்கும் அந்த டவலை அப்படியே முகத்தின் மீது வைத்து மசாஜ் கொடுக்க வேண்டும். அதன்பின்பு 10 நிமிடங்கள் கழித்து ஐஸ் கியூபை கொண்டு மெதுவாக முகத்தை மசாஜ் செய்து விட்டு பாருங்கள். உங்களுடைய முகம் பளபளப்பா உடனடியா மாறி இருக்கும்.

face11

வாரத்தில் 3 நாட்கள் இப்படி செய்யலாம். முகத்தில் தேவையற்ற கரும்புள்ளிகள், வெயிலில் சென்று வந்த சண் டேன் எல்லா பிரச்சனைக்கும் உடனடி தீர்வை கொடுக்கும். உங்களது சருமத்தின் நிறம் உடனடியாக வெள்ளையாக மாறும். அந்த அளவிற்கு பவர்ஃபுள் ரிமெடி தான் இது. நம்பவே முடியாத அளவுக்கு ஜொலி ஜொலிக்கும் சருமத்தைப் பெற இதை மட்டும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் மட்டும்.