உப்பு கரை, எண்ணெய் கரை உள்ள டைல்ஸ் மற்றும் டாய்லெட் சுத்தம் செய்ய 5 ரூபாய்க்கு இந்தப் பொருள் மட்டும் இருந்தா போதுமே!

paste-toilet-clean
- Advertisement -

சமையலறையில் இருக்கும் விடாப்பிடியான கரைகள், டைல்ஸ் கரைகள், உப்பு கறைகள் போன்றவற்றையும் கழிப்பறை டைல்ஸ் மற்றும் டாய்லெட்டை சுத்தம் செய்ய நாம் அடிக்கடி மனக்கெட வேண்டி இருக்கும். ஆனால் அஞ்சு ரூபாய்க்கு இந்த பொருள் மட்டும் நம்ம வீட்டில் இருந்தால், இனி கொஞ்சம் கூட கஷ்டப்படவே வேண்டாம். எல்லாவற்றையும் பத்து நிமிஷத்துல பளபளன்னு ஆக்கிடலாம். அது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் பல் தேக்க பயன்படுத்தும் பற்பசை நிறைய நுரைக்க செய்யும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் மூலக்கூறுகள் பற்களில் இருக்கும் அழுக்குகளை மட்டும் அல்ல, எனாமல் போல வழவழப்பு தன்மை உள்ள எந்த பொருளிலும் சூப்பராக செயல்பட்டு அதில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகளையும் சுலபமாக நீக்கிவிடும் ஆற்றல் கொண்டுள்ளது. குறிப்பாக கோல்கேட் பேஸ்டில் இருக்கும் எஃபக்டிவான மூலக்கூறுகள் டைல்ஸ், பீங்கான், கடினமான பிளாஸ்டிக் போன்றவற்றில் இருக்கும் அழுக்குகளை, விடப்படியான எண்ணெய் கறைகளை நீக்கி ரொம்ப சுலபமாக நமக்கு சுத்தம் செய்து கொடுக்கும்.

- Advertisement -

நீங்கள் புதிதாக கோல்கேட் பேஸ்ட் வாங்கி வைத்தாலும் சரி அல்லது மீதம் இருக்கும் தூக்கி போட்ட டியூப்களில் உள்ள பேஸ்ட்டை பயன்படுத்தினாலும் சரி. கோல்கேட் பேஸ்ட்டை தேவையான அளவிற்கு கெட்டியாக தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் வேறு எதையும் நீங்கள் சேர்க்க தேவையில்லை.

கழிப்பறையை பொறுத்தவரை நீங்கள் குளிக்கும் பொழுது தினமும் சுத்தம் செய்து விடுவது உங்களுக்கு வேலையை மிச்சப்படுத்தி கொடுக்கும். வாரம் ஒரு முறை கடினமான கறைகளை, கிருமிகள் நீக்கும் தரமான லிக்விட்களை பயன்படுத்தி சுத்தம் செய்தால் ஆரோக்கியமானது. நீங்கள் தினமும் குளிக்க போகும் முன்பு சிறிதளவு இந்த கோல்கேட் ஸ்ப்ரேயை பயன்படுத்தி எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். பின்னர் பிரஷ் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவி பாருங்கள். பளிச்சு பளிச்சென எல்லா விதமான டைல்ஸ் மற்றும் பீங்கான் டாய்லெட்கள் மின்னும்.

- Advertisement -

அதே போல கிச்சன் சுவற்றில் இருக்கும் டைல்ஸ்களிலும் விடாப்படியான எண்ணெய் கறைகள் இருக்கும். இந்த கறைகளை வாரம் ஒரு முறையாவது கோல்கேட் ஸ்ப்ரே செய்து ஒரு முறை சுத்தமான துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பிரஷ் கொண்டு லேசாக தேய்த்து கொடுத்தால் போதும், சிரமம் இல்லாமல் எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள் எதுவாக இருந்தாலும் வெளிவந்து விடும். ஸ்பிரே செய்த பின்பு காட்டன் துணியால் துடைத்து எடுத்தாலே எண்ணெய் பிசுப்புகள் முதலில் எளிதாக வருவதை நீங்கள் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
எவ்வளவு பெரிய டிரைனேஜ் பிளாக்காக இருந்தாலும் அதை சுத்தம் செய்ய இந்த 1 சொல்யூஷன் பௌடர் போதும். வினிகர், சோடா உப்பு, சுடுதண்ணீர் எதுவுமே வேண்டாம்.

பின்னர் மிக்ஸி ஜாருக்கு பின்னால் இருக்கும் அழுக்குகள் நீக்கவும் இந்த ஸ்பிரே பயன்படுத்தி பார்க்கலாம். பாத்திரம் கழுவும் சிங்க்கை சூப்பர் கிளீன் செய்வதற்கு தினமும் இரவு தூங்கப் போகும் முன்பு எல்லாம் பாத்திரங்களையும் கழுவி விட்டு கொஞ்சம் ஸ்பிரே செய்து லேசாக பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் போதும், கரப்பான் பூச்சி கூட அதிலிருந்து வராது, இந்த வாசனைக்கு! பழைய அழுக்கு பிடித்துள்ள சீப்புகளை கழுவ கூட இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்தலாம். இவ்வளவு பலன்களை தரக்கூடிய இந்த கோல்கேட் ஸ்ப்ரே ரொம்பவும் மலிவானது தான், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -