எவ்வளவு பெரிய டிரைனேஜ் பிளாக்காக இருந்தாலும் அதை சுத்தம் செய்ய இந்த 1 சொல்யூஷன் பௌடர் போதும். வினிகர், சோடா உப்பு, சுடுதண்ணீர் எதுவுமே வேண்டாம்.

shink
- Advertisement -

நம்முடைய வீட்டில் சிங்க் வாஷ்பேஷன் இவைகள் தண்ணீர் போகாமல் அடைத்துக் கொண்டாலும் சரி, அல்லது  பாத்ரூமில் இருக்கும் தண்ணீர் போகும் பாதை அடைத்துக் கொண்டாலும் சரி, கடைகளில் ட்ரைனிங் கிளீனர் என்று விற்கக்கூடிய ஒரு பவுடரை வாங்கி தான் கொட்டி அந்த அடைப்பை சுத்தம் செய்வோம். அந்த பவுடரை கொட்டியவுடன் அதில் தண்ணீர் பட்டால் தண்ணீர் பொங்கி ஒரு ரியாக்ஷன் உண்டாகும். அந்த ரியாக்ஷனின் மூலம் அடைப்பு நீக்கப்பட்டு தண்ணீர் வெளியேறும். ஆனால் கடைகளில் வாங்க கூடிய இந்த சிறிய பாக்கெட் பவுடர் விலை மிக மிக அதிகம். ஒரு பாக்கெட்டை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். அந்த டிரைனேஜ் கிளீனர் சொல்யூஷனை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் குறைந்த செலவில் எப்படி தயாரிப்பது என்று தான் என்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

லேசாக அடைத்திருக்கக்கூடிய சிங்க் ஓட்டைகள், வாஷ்பேஷன் ஓட்டைகளை சுத்தம் செய்ய ஒரு சின்ன குறிப்பையும், அதேசமயம் பெரிய டிரைனேஜில் அடைத்துக் கொண்டிருக்கும் மைக்காகவர், நார் போன்ற குப்பைகளை நீக்கக்கூடிய அளவுக்கு ஒரு பவர்ஃபுல்லான கிளீனிங் பவுடர் எப்படி தயார் செய்வது என்ற இரண்டு பயனுள்ள குறிப்புகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

முதலில் சிங்க் வாஷ்பேஷன் போன்ற சின்ன சின்ன இடங்களில் இருக்கும் அடைப்பை நீக்க சிட்ரிக் ஆசிட் (citric acid ) – 100 கிராம், வாஷிங் சோடா 100 கிராம், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்தால் சூப்பரான டிரைனேஜ் கிளீனர் தயார். இப்படி தயார் செய்து இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் என்று எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை சிங்க் தண்ணீர் போகும் ஓட்டைக்குள் கொட்டி விட்டு, ஒரு சிறிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து ஃபோர்சாக இந்த ஓட்டையில் ஊற்றலாம்‌. அப்படி இல்லை என்றால் டேப்பை முழு வேகத்தில் திறந்து கூட அந்த தண்ணீரை டிரைனேஜ் ஓட்டைக்குள் விட்டால் அடைப்பு மொத்தம் சுத்தமாக நீங்கிவிடும். இந்த பவுடர் கைகளில் படும்போது எந்த பிரச்சனையும் வராது. கையில் ஈரம் இல்லாமல் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

கொஞ்சம் பெரிய அடைப்பாக இருக்கும் பட்சத்தில் அதற்கு முதலில் சொன்ன குறிப்பு பயன்படுத்த முடியாது. சிட்ரிக் ஆசிடும், வாஷிங் சோடாவும் சேரும்போது சிறிய அடைப்பு மட்டும் தான் சரியாகும். அதுவே காஸ்டிக் சோடா (caustic soda) என்ற ஒரு பொருள் நமக்கு கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி பெரிய பெரிய டிரைனேஜ் அடைப்பை கூட நம்முடைய வீட்டில் சரி செய்து கொள்ளலாம்.

ஆனால் இதை பயன்படுத்தும் போது கையில் கிளவுஸும், மூக்கிற்கு மாஸ்க்கும் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் காஸ்டிக் சோடா 50 கிராம், எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 200ml அளவு தண்ணீரை ஊற்றி ஒரு கரண்டியை வைத்து கரைக்க வேண்டும். அந்த காஸ்டிக் சோடா தண்ணீரில் முழுமையாக கரைந்து முடிந்த பின்பு ஐந்து நிமிடம் கழித்து இந்த சொல்யூஷனை டிரைனேஜ் ஓட்டைக்குள் ஊற்றிவிட்டு அப்படியே 5 லிருந்து 6 மணி நேரம் தண்ணீர் ஊற்றாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அடிப்பிடித்த பாத்திரம் கொஞ்சம் கூட கீறல் விழாமல் சுலபமாக சரி செய்வது எப்படி? இப்படி பண்ணா நீங்கள் நாரு போட்டு தேய்க்கவே வேண்டாம்!

அடைப்பில் இருக்கக் கூடிய எப்படிப்பட்ட குப்பையாக இருந்தாலும் மக்கி அது வெளியேறிவிடும். பிளாஸ்டிக்கை கூட அடித்துச் செல்லக்கூடிய சக்தி இந்த சொல்யூஷனுக்கு உண்டு. நாப்கின் பிளாஸ்டிக் கவர் ஏதாவது ட்ரைனேஜில் போய் அடைத்து கொண்டிருந்தால் கூட அடைப்பை அவ்வளவு சுலபத்தில் நீக்க முடியாது. அப்படிப்பட்ட அடைப்புக்கு கூட இந்த சொல்யூஷன் வொர்க் அவுட் ஆகும். கொஞ்சம் ஜாக்கிரதையா ட்ரை பண்ணி பாக்கணும். கெமிக்கலை தண்ணீரில் கலக்கும் போது கவனம் அதிகம் தேவை. முயற்சி செய்து பாருங்கள். உங்க வீட்டில அதிக செலவு இல்லாமல் பிளம்பரை கூப்பிடாமலேயே இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும்.

- Advertisement -