‘எந்த சூழ்நிலையிலும், சம்பளத்தை பிடித்தம் செய்ய மாட்டோம்!’ தொழிலாளர்களின் வயிற்றை குளிர வைத்த அந்தப் பிரபல நிறுவனங்கள் எவை?

volkswagen-news
- Advertisement -

உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸிடமிருந்து, மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. சின்ன சின்ன வியாபாரம் செய்பவர்கள் முதற்கொண்டு, பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் கூட மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் முதல், தினசரி கூலித் தொழிலாளர்கள் வரை பாதிப்படைந்து உள்ளார்கள். சொல்லப்போனால், அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி என்ன என்பது கூட தெரியாமல் பல பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.

money

உலகமே முடங்கிப்போய் இருக்கும் இந்த சூழ்நிலையில் சில பிரபல நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த சூழ்நிலையிலும், சம்பள பிடித்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள். தொழிலாளர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அந்த நிறுவனங்கள் என்னனென்ன என்பதைப் பற்றியும், தங்களுடைய பணியாளர்களுக்கு அவர்கள் அளித்துள்ள நம்பிக்கை என்ன? என்பதைப் பற்றிய செய்தியையும் இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஐரோப்பாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா-ஃபோக்வேகன், சீன நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ், மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள், தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சம்பளத்தை பிடிக்கப் போவதில்லை என்றும், அது மட்டுமல்லாமல் அவர்கள் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்ய மாட்டார்கள் என்றும் உறுதி அளித்துள்ளது.

car-company

குறிப்பாக ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் என்ற இந்த நிறுவனம் புதியதாக வேலைக்கு ஆட்களை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் இந்த நிறுவனம் பெரிய முதலீட்டை செய்யப்போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் புதிய மாடல்களை அறிமுகம் படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த மோசமான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்பதை குறிப்பிடும் வகையில், ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின், இந்தியாவிற்கான நிறுவனர் குர்பிரதாப் நம்பிக்கை வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் எந்த தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும், போனஸ் வழங்குவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படுமே தவிர, அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பதை, அந்நிறுவனத்தில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

volkswagen-news2

இதேபோன்ற தகவலை ரெனால்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிறுவனர் வெங்கட்ராம் மமில்லபல்லேயும், சீனாவைச் சேர்ந்த எம்ஜி நிறுவனமும் தங்களுடைய ஆறுதல் தரும் உறுதிமொழிகளை, நிர்வாகத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

முதலாளிகள், தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களையும், தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும் சம்பவம் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களை காக்கும் கடமை, அவர்கள் வேலை செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு உள்ளது. சம்பளப் பிடித்தம், பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்ற கட்டுப்பாட்டை அரசாங்கம் விதித்தும், சில நிறுவனங்கள் இன்று அதை கடைப் பிடிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

- Advertisement -