குக்கரில் பருப்பு வேக வைத்தால் பொங்கி வழிந்து விடுகிறதா? இதோ இப்படி செய்து பாருங்கள் இனி பொங்கி வழியாது.

pressure-cooker
- Advertisement -

இப்போதெல்லாம் பெரும்பாலும் வீடுகளில் குக்கரில் தான் அனைத்து சமையல்களுமே நடக்கிறது. இதில் கேஸ் செலவு குறைவு. அதே நேரத்தில் விரைவாகவும் வேலை முடிந்து விடுகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த குக்கர் ஒரு வரப் பிரசாதம் தான். குக்கரில் சமைக்க கூடாது சாதம், வைக்க கூடாது, சுகர் உள்ளவர்கள் குக்கர் சமையல் சாப்பிட கூடாது. இது போன்று பல விஷயங்கள் இருந்தாலும் குக்கர் இல்லாமல் இன்றைய சமையல் இல்லை என்பது மட்டும் தான் உண்மை.

சாதம் குழம்பு போன்றவைகளை மற்ற பாத்திரத்தில் சமைத்தாலும் பருப்பு வேக வைப்பது குக்கரில் தான். இப்படி வேக வைப்பதில் ஒரு சிக்கல் உண்டு. சமைக்கும் நேரத்தை குறைக்கலாம் என்று யோசித்து குக்கரில் சமைத்தால் அதிலிருந்து பருப்பு தண்ணீர் பொங்கி கிச்சன் மேடை முழுவதும் பரவி விடும். இதனால் அதை சுத்தம் செய்யும் வேலை நமக்கு பல மடங்காக விடுகிறது. அதிலும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இது போன்று பொங்கி விட்டால் எரிச்சலுடன் காலையிலே டென்ஷன் ஆகி அன்றைய நாளே வீணாகி விடும்.

- Advertisement -

இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க இதோ எளிய இரண்டு வழிமுறைகள். இதை செய்வதற்கு முன் உங்கள் குக்கரின் கேஸ் கட் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். கேஸ் கட் சரியாக இல்லாத நேரத்திலும் இந்த பிரச்சனை வரும். ஒவ்வொரு முறை சமைத்த பிறகும், கேஸ் கட்டை நன்றாக சுத்தம் செய்து வைத்துவிடுங்கள். சமைப்பதற்கு சிறிது நேரம் முன்பு தண்ணீரிலோ அல்லது ஃப்ரீசரீலோ வைத்து எடுத்த பின் உபயோகிக்கலாம்.

பருப்புத் தண்ணீர் வெளியே பொங்கி வராமல் இருக்க குக்கர் மூடியில் கேஸ் கட்டை போட்ட பிறகு, கேஸ் கட் சுற்றிலும் எண்ணெயை தடவி விட வேண்டும். கேஸ் கட் குக்கர் மூடி என்று அனைத்து இடங்களிலும் எண்ணெயை நன்றாக தேய்த்து விட்ட பின் குக்கரை மூடி சமைக்க ஆரம்பிக்கவும். இதனால் இரண்டு பலன்கள் உண்டு. ஒன்று பருப்பில் இருந்து தண்ணீர் பொங்கி வெளியே வராது. மற்றொன்று எண்ணெய் தடவி இருப்பதால் பருப்புகள் பொங்கி மூடியில் ஒட்டி அதை சிரமப்பட்டு தேய்க்கும் வேலை இல்லாமல் மூடியில் ஒரு பருப்பு கூட ஒட்டாமல் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

இரண்டாவதாக குக்கரில் காய்கள், பருப்பு இப்படி எதை வேக வைத்தாலும் பருப்பு தண்ணீர் அனைத்தும் சரியாக வைத்த பிறகு குக்கரில் ஒரு சின்ன கிண்ணத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு குக்கரை மூடி சமைத்தால் பருப்பு பொங்கி வெளியே வராது. இதிலும் இன்னொரு நன்மை உண்டு இப்படி சிறிய கிண்ணம் வைத்து காய்கள் வேக வைக்கும் போது காய்கள் வெந்த தண்ணீர் நமக்கு தனியாக இந்த கிண்ணத்தில் கிடைக்கும் இதை அப்படியே குழந்தைகளுக்கு சூப் தயாரித்தும் கொடுக்கலாம்.

இந்த இரண்டு முறைகள் உங்கள் சமையலறை வேலைகளை இன்னும் சீக்கிரமாகவும் சமையலறையை சுத்தமாகவும் வைக்க பெரிதும் உதவி செய்யும்.

- Advertisement -