கோவில் புளியோதரை தோற்றுப் போகும் அளவிற்கு குக்கரில் மணக்க மணக்க சூப்பரான புளியோதரை 2 விசிலில் எப்படி செய்வது?

puliyotharai-powder
- Advertisement -

புளியோதரை என்றாலே புளி காய்ச்சல் செய்து அதனுடன் தேவையான அளவிற்கு வடித்த சாதத்தை கலந்து வைப்பது தான் என்று நினைத்திருப்போம் ஆனால் குக்கரில் ரொம்பவும் சுலபமாக இரண்டு விசிலில் சட்டுன்னு சூப்பரான, டேஸ்டியான புளியோதரை செய்து அசத்த முடியும். புளியோதரைக்கு தேவையான இந்த பொடியை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொண்டால், இப்போது செய்வதற்கு 10 நிமிடம் கூட எடுக்காது, சுலபமாக செய்துவிடலாம். குக்கரில் புளியோதரை செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், எள்ளு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 3. கட்டி பெருங்காயம் – 2 இன்ச்.

- Advertisement -

புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:
புளி – பெரிய எலுமிச்சை பழம் அளவு, நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், தோல் உரித்த வேர்க்கடலை – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வடித்த சாதம் – அரை கிலோ, உப்பு – தேவையான அளவு.

குக்கரில் புளியோதரை செய்முறை விளக்கம்:
புளியோதரை செய்வதற்கு முதலில் இரண்டு ஆழாக்கு அளவிற்கு அரிசியை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் ஸ்பூன் வெந்தயம், தோல் உரித்து வைத்துள்ள முழு வேர்க்கடலை ஒரு கப் அளவிற்கு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மஞ்சள் தூள் மற்றும் நிறம் கொடுக்க சிறிது மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் வறுத்து வைத்துள்ள பொடியை முக்கால் பாகம் அளவிற்கு சேர்க்க வேண்டும். பொடியை எப்படி வறுப்பது? என்று இனி பார்ப்போம். இந்த புளியோதரை பொடியை முன்கூட்டியே நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் பத்து நிமிஷத்தில் குக்கரில் இரண்டு விசில் விட்டு புளியோதரை மணக்க மணக்க சுவையாக செய்துவிடலாம். அடுப்பில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தனியாவை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், எள் என்று வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து லேசான சூட்டில் வறுக்க வேண்டும்.

வெள்ளை எள் அல்லது கருப்பு எள் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேருங்கள். பின்னர் மூன்று வர மிளகாய் கிள்ளி சேர்த்து சூடு பறக்க குறைவான தீயில் லேசாக வறுத்து அடுப்பை அணைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை சேர்த்து வறுக்க வேண்டும். பெருங்காயம் உருகி வரும் பொழுது நன்கு அழுத்தி கொடுங்கள். இருபுறமும் திருப்பிப் போட்டு சிவக்க வறுத்ததும் அடுப்பை அணைத்து இதையும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சூப்பரான புளியோதரை பொடி இப்படி தயாரித்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் தேவையான நேரத்தில் சட்டுனு உபயோகிக்கலாம்.

குக்கரில் புளியோதரை பொடியை சேர்த்ததும் ஒரு ஆழாக்கு அரிசிக்கு 2 ஆழாக்கு தண்ணீர் வீதம், இரண்டு ஆழாக்கு அரிசி சேர்த்துள்ளதால் ஊற வைத்துள்ள புளி தண்ணீரை கரைத்து சேர்த்து மீதம் இருக்கும் அளவிற்கு தண்ணீரை சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து ஊற வைத்துள்ள அரிசியையும் சேர்க்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி வைத்து விடுங்கள். ரெண்டுல இருந்து மூன்று விசில் பொலபொலவென்று ரொம்பவும், சுவையான புளியோதரை தயாராகி இருக்கும். பின்னர் மீதம் இருக்கும் பொடி மற்றும் அதனுடன் நல்லெண்ணெய் கொஞ்சம் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு சாப்பிட்டு பாருங்கள். கோவில் புளியோதரையே தோற்றுப் போய்விடும், அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -