இதுவரை யாருக்கும் தெரிந்திராத சில சமையல் ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

சமையல் என்பது ஒரு கலையாகும். இது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கற்றுக் கொண்டு வைத்திருப்பது மிகவும் நல்லது. சமையலில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் ரொம்பவே உபயோகமாக இருக்கும். அவ்வகையில் இந்த சில குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவசர சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும் இந்த சில குறிப்புகளை பயன்படுத்தி நீங்களும் பலன் பெறலாம். இதுவரை தெரிந்திராத சமையல் குறிப்புகளை காண, வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

cook1

குறிப்பு 1:
கத்திரிக்காய் கறி செய்ய இனி வறுத்து அரைக்க வேண்டிய அவசியமில்லை! கொஞ்சம் மல்லித் தூள், பருப்புப்பொடி, ரசப்பொடி, மிளகாய் பொடி, இட்லி பொடி, கடலை மாவு, அரிசி மாவு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டு மிக்ஸ் பண்ணி கத்திரிக்காய் கறி செய்தால் அபாரமான சுவை இருக்கும்.

குறிப்பு 2:
பாயாசம் செய்யும் பொழுது கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய் விட்டதா? வருத்தப்பட வேண்டாம். கடலை மாவை நெய்யில் வறுத்து தண்ணீரில் கெட்டியாக கரைத்துக் கொண்டு கலந்து கொண்டால் போதும் பாயாசம் கெட்டியாகவும், வித்தியாசமான வாசத்துடனும் சுவையாக மாறிவிடும்.

aval-payasam

குறிப்பு 3:
பூரி சுட நேரமில்லையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண சட்டுன்னு சுட்டு எடுக்கலாம். பூரிக்கு மாவு உருட்டும் பொழுது பெரிதாக உருட்டிக் கொண்டு அதை கத்தியால் நான்காக வெட்டி பூரி சுட்டால் வித்தியாசமான வடிவத்திலும், ஒரே மாவில் 4 பூரிகள் என்று சீக்கிரமாகவும் சுட்டு விடலாம்.

- Advertisement -

குறிப்பு 4:
கூட்டு, வறுவல் போன்ற உணவு வகைகளில் உப்போ, காரமோ அதிகமாகி விட்டால் வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் காய்ந்த பிரட் துண்டுகள் அல்லது ரஸ்க் துண்டுகள் இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் சேர்த்து விட்டால் போதும் சரியாகி விடும்.

rusk-powder

குறிப்பு 5:
அடிக்கடி பஜ்ஜி சுடுபவர்களா நீங்கள்? அதனால் ஏற்படும் வாயு கோளாறுகள் இல்லாமல் இனி இப்படி சுட்டு பாருங்கள். பஜ்ஜி மாவில் ஒரு டீஸ்பூன் சீரகத்தை பொடித்து போடவும். நான்கைந்து பூண்டு பற்களை அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பஜ்ஜி சுட்டு எடுத்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும். வாயு தொந்தரவுகளும் வராது.

குறிப்பு 6:
மைதா, ரவை, அரிசி போன்ற பொருட்களில் பூச்சி, புழுக்கள் வந்து விடுகிறதா? அப்படி என்றால் கொஞ்சம் வசம்பை நுணுக்கி சேர்த்து பாருங்கள். பூச்சி, புழுக்கள் அதில் வரவே வராது.

rice-bugs

குறிப்பு 7:
ஃப்ரூட் சாலட் செய்பவர்கள் பழங்களை வெட்டும் பொழுது அவைகள் கருப்பாக மாறி விடும். இவ்வாறு நிறம் மாறாமல் இருக்க எலுமிச்சைச்சாறு பிழிந்து அதில் புரட்டி எடுத்து விட்டு செய்தால் பிரஷ்ஷாக அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

குறிப்பு 8:
பொதுவாக வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை நிறம் மாறாமல் இருக்க அவற்றை அரிந்த பின் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கலாம். அதற்கு பதிலாக மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல், புளிப்பு சுவையும் இல்லாமல் அப்படியே இருக்கும்.

raw-banana-vazhakkai

குறிப்பு 9:
உடல் உஷ்ணம் தணிய வெள்ளரிக்காய் சாம்பார் வைக்கலாம். அட என்ன வெள்ளரிக்காயில் எப்படி சாம்பார் வைப்பது என்று யோசிக்கிறீர்களா? மீடியம் சைஸ் வெள்ளரிக்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி புளி அதிகம் சேர்க்காமல் சாம்பார் வைத்தால் பரங்கிக்காய் சாம்பார் போல சூப்பராக இருக்கும். உடல் உஷ்ணமும் தணியும்.

cucumber

இக்குறிப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும், அவசர தேவைகளுக்கும் பயன்படுத்தி எல்லாரும் பயன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
கருணைக்கிழங்கு எண்ணெய் பத்தை கார சாரமாக செய்வது இவ்வளவு ஈசியா? ஆச்சிங்க வீட்ல எல்லாம் இது ரொம்ப ஃபேமஸ்ங்க! நீங்களும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.