கருணைக்கிழங்கு எண்ணெய் பத்தை கார சாரமாக செய்வது இவ்வளவு ஈசியா? ஆச்சிங்க வீட்ல எல்லாம் இது ரொம்ப ஃபேமஸ்ங்க! நீங்களும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

கருணைக்கிழங்கு, வாழைக்காய், சேப்பங் கிழங்கு, உருளைக்கிழங்கு இந்த கிழங்கு வகைகளை எல்லாம் நம்முடைய பாட்டிமார்கள் எண்ணெய் பத்தை என்று சொல்லி தோசைக்கல்லில் வறுத்து எடுப்பார்கள். அது பார்ப்பதற்கு மீன் வருவல் போல இருக்கும். சுவையும் காரசாரமாக சூப்பராக இருக்கும். ஆனால் ஆச்சி செய்யக்கூடிய அதே கை பக்குவமும், ருசியும் நாம் செய்தால் வராது. இந்த எண்ணை பத்தைகளை பக்குவமாக நம்முடைய வீட்டிலும், சுலபமாக செய்ய முடியும். அது எப்படி என்ற ட்ரிக்கதா இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இந்தப் பதிவில் கருணைக்கிழங்கு எண்ணெய் பத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

karunai-kilangu

இந்த கருணைக்கிழங்கை மட்டும் எப்போதுமே வெயில் காலங்களில் வாங்கக்கூடாது. குளிர்காலம், மழை காலங்களில் வாங்கி சமைத்தால் நல்ல ருசியாக இருக்கும். அதே சமயத்தில் நம்முடைய தொண்டையும் கனராமல் இருக்கும். பொதுவாக இந்த கருணை கிழங்கை அவியலில் சேர்ப்பார்கள். அப்படி இல்லை என்றால், வேறு ஏதாவது ஒரு காயோடு சேர்த்து புளிக்குழம்பு சமைப்பார்கள். நிறைய பேர் சமையலில் இந்த கிழங்கை பயன்படுத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக சத்து தரும் இந்த கருணைக்கிழங்கை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, சீசன் சமயத்தில் நம்முடைய சமையலில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -

முதலில் கடையிலிருந்து வாங்கி வந்த கருணைக் கிழங்கை தோல் சீவி, கொஞ்சம் பெரிய பெரிய அளவில் அரை இன்ச் தடிமனில் வெட்டிக் கொள்ள வேண்டும். ரொம்ப மெலிசாக வெட்டிக் கொள்ள கூடாது. வெட்டிய கிழங்குகளை முதலில் நல்ல தண்ணீர் ஊற்றி அலசி கொள்ள வேண்டும். கருணைக் கிழங்கை சுத்தம் செய்வதற்கு முன்பாக, உங்களது கைகளில் நல்லெண்ணை அல்லது புளி தண்ணீர் தடவிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இல்லையென்றால் கை கொஞ்சம் அரிப்பெடுக்கும்.

karunaikizangu-fry3

வெட்டிய இந்த கிழங்குகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அந்த கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதாவது அந்த கிழங்கு பாதி அளவு வெந்தால் மட்டுமே போதும். பாதியளவு வெந்த கிழங்குகளை, தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

10 துண்டு கிழங்குகள் எடுத்துக்கொண்டால், இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மசாலா பொருட்கள் சரியாக இருக்கும். 10 துண்டுகளுக்கு மேலே நீங்கள் இந்த வறுவலை செய்தால், அதற்கு தகுந்தார்போல் மசாலா பொருட்களை கூட்டி போட்டுக் கொள்ளுங்கள்.

karunaikizangu-fry

முதலில் சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். புளி கரைசலை ரொம்பவும் தண்ணியாக கரைத்து விடக்கூடாது. இந்தக் கரைசல் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில், தனி மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இந்த பொருட்களை முதலில் போட்டு ஸ்பூனால் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு தயாராக இருக்கும் புளிக்கரைசலை இந்த மசாலா பொருட்களோடு சேர்த்து, பேஸ்ட் போல கரைக்க வேண்டும். (புளிக்கரைசலை மொத்தமாக ஊற்றி, மசாலா பொருட்களில் கரைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக புளி கரைசலை சேர்த்து, பேஸ்ட் பக்குவத்திற்கு கரைசலைக் கொண்டு வாருங்கள்.) நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தண்ணீர் பதத்திற்கு இந்த கலவையானது போகவே கூடாது.

karunaikizangu-fry1

அடுத்தபடியாக வேக வைத்து தட்டில் தயாராக இருக்கும் கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக கையில் எடுத்து, இந்த பேஸ்டை அந்த கிழங்கு துண்டின் மேல் முழுவதுமாக படும்படி தடவ வேண்டும். ஒருவேளை நீங்கள் தயார் செய்த புளிக்கரைசல் மசாலாவானது தண்ணீராக இருந்தால், கிழங்கில் ஒட்டாது அப்போது வருவல் நன்றாக வராது.

மசாலா பொருட்களை சேர்த்து தடவிய கருணை கிழங்குகளை 1/2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். தேவைப்பட்டால் இந்த 1/2 மணி நேரமும் மசாலா பொருட்கள் தடவிய கருணைக்கிழங்கை, பிரிட்ஜ் உள்ளே வைத்தும் எடுத்துக்கொள்ளலாம். மசாலா பொருட்கள் இன்னும் அதிகமாக கிழங்கின் உள்ளே இறங்கும்.

chenai

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, நன்றாக சூடு படுத்தி விட்டு, 4 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, சூடுபடுத்தி அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒவ்வொரு கிழங்காக கடாயில் போட்டு, மிதமான தீயில் தான் வறுத்து எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் நன்றாக சிவந்து வெந்ததும், மறுபக்கம் திருப்பி போட்டு, நன்றாக சிவக்க வைத்து எடுத்து பரிமாறினால் சுட சுட கருணைக்கிழங்கு ஃப்ரை, காரசாரமாக தயாராகியிருக்கும். சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. அந்த அளவிற்கு புளிப்பு காரம் உப்பு தூக்கலாக இருக்க வேண்டும். செய்யும் போது உங்களுக்கு வரும் வாசம் பசியை தூண்டும் என்பது, உங்களுக்கு செய்யும் போது தான் தெரியும். ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! இதைப்போல சேனைக்கிழங்கு, வாழைக்காய் உருளைக் கிழங்கிலும் செயலாங்க.

இதையும் படிக்கலாமே
கேழ்வரகு மாவு அடையை ஒருவாட்டி இப்படி தட்டி பாருங்க! அந்த காலத்துல, நம்ம பாட்டி சுட்ட அடை டேஸ்ட் கட்டாயம் வரும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -