செம்பு, பித்தளை பொருட்களை சுத்தம் செய்ய எளிமையான முறை

brass copper things
- Advertisement -

பெண்கள் அனைவருக்கும் வீட்டில் செய்யக் கூடிய வேலைகளிலே கொஞ்சம் கடினமான வேலை என்றால் இந்த பூஜை பொருட்களை சுத்தம் செய்வது தான். சில வீடுகளில் பூஜை பொருட்கள் பித்தளையில் இருக்கும். சில வீடுகளில் செம்பு பொருட்களும் இருக்கும். எப்படி ஆயினும் இந்த பூஜை பொருட்களை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான வேலை தான்.

ஏனெனில் நாம் என்ன தான் கை வலிக்க தேய்த்தாலும் கூட, உடனே அதில் எண்ணெய் கறை வடிந்து அழுக்காகி விடும் அல்லது நிறம் மாறி விடும். மறுமுறை பூஜை செய்யும் போது திரும்பவும் தேய்க்க வேண்டும். அதற்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கி செய்ய வேண்டியதாக இருக்கும். இனி இந்த அவஸ்தை எல்லாம் தேவையே கிடையாது.

- Advertisement -

பித்தளை செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் போதும் நொடியில் சுத்தம் செய்து விடலாம். இதை கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!. இதை செய்யும் முறை அதை விட ஆச்சரியமாக இருக்கும் வாங்க. அது எப்படி என்று வீட்டு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செம்பு பித்தளை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

இந்த முறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் அதில் இருக்கும் எண்ணெய்களை எல்லாம் வேறு கிண்ணத்தில் மாற்றி விட்டு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே நாம் செய்யப் போகும் இந்த முறையில் எண்ணெய் பிசுக்கு போக சோப்பு எதையும் பயன்படுத்தப் போவதில்லை.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி உருண்டையை சேர்த்து விடுங்கள். அதே போல் இரண்டு எலுமிச்சை பழத்தை சின்ன சின்னதாக அரிந்து அதையும் அந்த தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீர் கொதிக்கும் சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவுக்கு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு கல்லுப்பு தூள் உப்பு எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

அதன் பிறகு இந்த தண்ணீரை கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் வாழ விடுங்கள் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும் போது நீங்கள் தேய்க்க எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தை எல்லாம் இந்த தண்ணீரில் போட்டு எடுத்து விடுங்கள் போதும். கை வைத்து தேய்க்காமலே பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும். இந்த பாத்திரங்களிலே சில பொருட்கள் நாம் பிரஷ் வைத்து தேய்க்க வேண்டியதாக இருக்கும்.

இந்த முறையில் சுத்தம் செய்யும் போது அந்த அவசியமும் இருக்காது. செம்பு பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய இதைவிட ஒரு எளிமையான வழி இருக்காது. இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -