இராவணனுக்கு சிவபெருமான் உபதேசித்த இந்த பரிகாரம் தினமும் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம் தெரியுமா?

copper-sivan

அனைவருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை தான் உண்டு. யாருக்குத் தான் தோல்வியை சந்திக்க பிடிக்கும்? தோல்வியை கண்டு பயப்பட்டு ஓடவும் கூடாது. அதற்காக தோல்வியை வா வா என்று அழைத்து விடவும் முடியாது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தை நோக்கிய பயணத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் கட்டாயம் தேவை. அவர்களின் அருளன்றி நம்மால் எதையுமே சாதிக்க முடியாது. இந்த வகையில் இராவணன் சிவபெருமானிடம் உபதேசமாகப் பெற்ற இந்த பரிகாரத்தை செய்து வருபவர்களுக்கு தோல்வியே கிடைக்காத வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படியான பரிகாரம் தான் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Ravanan

அந்தக் காலம் முதல் மட்டுமல்ல புராண காலத்திலும் செம்பு பாத்திரம் அற்புதமான சக்திகளைக் கொண்டுள்ளது என்கிற புராணக் குறிப்புகள் உண்டு. இப்போது நவீன யுகத்தில் செம்பின் முக்கியத்துவம் ஓரளவுக்கு அனைவருக்கும் புரிந்து கொண்டே வருகின்றது. ஆனால் புராண காலத்திலேயே தோன்றிய செம்பின் மகிமையை இன்னும் நாம் உணர்ந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

பல வரங்களை சிவபெருமானை நோக்கி தவமிருந்து எளிதாக வாங்கிய இராவணன் தவத்தில் சிறந்தவராக திகழ்கின்றார். அத்தகையவர் சிவபெருமானிடம் உபதேசமாக வாங்கிய ஒரு தகவலை தான் நாம் பரிகாரமாக செய்ய இருக்கிறோம். இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் துன்பங்களும், தடைகளும் விலகும் என்பது நம்பிக்கை. சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலரும் அறியாத ஒரு தகவலாகவே இந்த தகவல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

copper-vessel

கங்கையில் குளித்தால் பாவங்கள் போகும். துன்பங்கள் நீங்கும். புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். அத்தகைய கங்கையின் புனிதத்தை சாதாரண செம்பிலேயே நம்மால் பெற்று விட முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆமாம்! இதைத் தான் சிவபெருமான் இராவணனுக்கு உபதேசித்தது.

- Advertisement -

தினமும் எவரொருவர் செம்பு பாத்திரத்தில் குளித்து வருகிறாரோ! அவர்களுக்கு எந்த ஒரு தோல்வியும் வருவதில்லையாம். செம்பில் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. கங்கையில் நீராடினால் எப்படி நம்முடைய பாவங்கள் நீங்கப் பெறுகின்றன? அதே போல தான் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குளிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். தினமும் செம்பு பாத்திரங்களில் தண்ணீரை வைத்து குளித்தால் உடலும் குளிர்ச்சி அடைகிறது.

copper-kudam

ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் செம்பு பாத்திரத்தில் குளிப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் உண்டு என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இப்போது பெருகி வரும் செம்பு உபயோகங்கள் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று தான். அவ்வகையில் இந்த தகவலும் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பவர்களுக்கு உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் நீங்கப் பெறுகின்றன. செம்பில் இருக்கும் வேதிப்பொருள் நீரைத் தூய்மை அடைய செய்து சத்துகளை நமக்கு நேரடியாக கொடுக்கின்றது. செம்பில் குடிக்கும் தண்ணீரும், குளிக்கும் தண்ணீரும் நம்மை ஆரோக்கியமாகவும், வெற்றியை நோக்கிய பயணத்தில் சாதனைகள் புரியவும் துணை புரிகின்றது என்பதை கூறி இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.