வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!

vilvam-sivan0
- Advertisement -

நவீன மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். காரணம், நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இதனால் வந்திருக்குமோ! அதனால் வந்திருக்குமோ என்ற மனக் குழப்பங்கள் தான். இயற்கை நமக்கு தந்திருக்கும் அரிய வகை சில மரங்கள், செடிகள் கொடிகள், நமக்கு நன்மை தருகின்றது.

vilvam

அந்த வரிசையில் வில்வ மரத்தை சிவபெருமானுக்கு இணையாக சொல்கிறார்கள். இந்த மரத்தை நம்முடைய வீட்டில், வளர்க்கலாமா? வளர்த்தால் நன்மையா தீமையா? வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வில்வத்தில் சிவபெருமானைக் காண வேண்டுமென்று நினைப்பவர்கள், அவரவர் வீட்டில் எந்த திசையில் வில்வத்தை வைத்து வளர்த்தால் நல்லது, என்ற பல கேள்விகளுக்கு உண்டான சந்தேகங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் முறையில் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வில்வம் சிவனுக்கு மட்டும் உரியது அல்ல. முருகப்பெருமான், லட்சுமி தேவி, இப்படியாக அந்த வில்வத்தை நாம் எந்த கடவுளின் ரூபத்திலும் நினைத்து வழிபாடு செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பொதுவாக வீட்டில் வில்வ மரத்தை எதற்காக வைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். சுத்தபத்தமாக அந்த வில்வத்தை பராமரிக்க முடியுமா என்ற சந்தேகம் யாருக்கு இருக்கிறதோ, அந்த வீட்டில் வில்வமரம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

vilvam

சுத்தபத்தமாக இருக்க முடியும். தீட்டு சமயங்களில் பெண்கள் அந்த மரத்தை தொடக்கூடாது. நம் வீட்டிற்கு வரும் வெளியாட்கள் அந்த மரத்தை தொடக்கூடாது. குளிக்காமல் அந்த மரத்தை தொடக்கூடாது. இப்படியாக பல விஷயங்கள் உள்ளன. சுத்தம் என்னும் ஒரு வார்த்தைக்குள் பல விஷயங்கள் அடங்கி உள்ளது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட உடல் சுத்தம், மனசுத்தம் இருப்பவர்கள் இந்த மரத்தை தைரியமாக வீட்டில் வளர்க்கலாம்.

- Advertisement -

பொதுவாகவே, வில்வ மரத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் அல்லது வடமேற்கு பகுதியில் வைப்பது சிறப்பான ஒன்று. உங்களுடைய வீடு வடக்கு பார்த்த வாசல் ஆக இருந்து என்றால், தெற்கே பார்த்து, உள்ளே நுழைவது போல் இருந்தால், உங்களுடைய வீட்டில் வில்வமரத்தை தென்மேற்கு மூலையில் வையுங்கள். அது தான் சரியான முறை.

direction-thisaigal

உங்களுடைய வீட்டு வாசல் தெற்கு பார்த்தவாரு இருந்து, வடக்கே பார்த்து உள்ளே நுழைவது போல இருந்தால், வில்வமரத்தை வடமேற்கு மூலையில் வையுங்கள் இது தான் சரியான முறை. எக்காரணத்தைக் கொண்டும் வடகிழக்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இப்படிப்பட்ட பெரிய அளவிலான மரங்களை வளர்க்க கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். இதற்கு என்ன காரணமாக இருக்கும். சூரியன் உதயமாகும் போது அதனுடைய ஒளிக்கதிர்கள், இரண்டு வகையான கதிர்வீச்சுகள், வட கிழக்குப் பக்கத்திலும், தென்கிழக்கு பக்கத்திலும் அதிவேகமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதன் மூலம் ஈசானிய மூலையான வடகிழக்குப் பகுதியில் இப்படிப்பட்ட பெரிய மரங்களை வளர்க்காமல் இருப்பதால் நம் வீட்டிற்கு நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

vastu 1

காரண காரியங்கள் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடப்பது இல்லை. காரண காரியங்கள் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் கண்மூடித்தனமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைக்கவும் இல்லை என்பதை இந்த இடத்தில் நாம் மனதில் கொண்டு, மரத்தையும் செடி கொடிகளையும் வளர்ப்பதன் மூலம் நமக்கு எப்போதுமே கெடுதல் நடக்காது என்ற விஷயத்தை நம்பி, வீட்டில் மரம் செடி கொடிகளை வளர்பதன் மூலம் எப்போதுமே நன்மை மட்டும்தான் நடக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திருமணமான வீட்டில் உடனடியாக செய்யக்கூடாத 3 தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளை செய்தால் வீட்டில், இழப்புகள் அதிகமாக இருக்கும். உதாசீனப்படுத்தாதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -