கொத்தமல்லித் தழையை 6 மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் பாதுகாத்து சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

coriander

நம்முடைய வீட்டில் பிரிட்ஜ் இருந்தாலும், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கொத்தமல்லித்தழையை வாங்கி தான் பயன்படுத்த வேண்டும். சீக்கிரமாக வாடி போகக்கூடிய, கெட்டுப் போகக்கூடிய இந்த கொத்தமல்லி தழையை 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாத்து எப்படி சமையலுக்கு பயன்படுத்துவது? விலைமலிவாக கிடைக்கும் போது நிறைய கொத்தமல்லித்தழையை வாங்கி எப்படி நம் வீட்டில் ஸ்டோர் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

coriander1

இரண்டிலிருந்து மூன்று கட்டு கொத்தமல்லி தழை 10 ரூபாய்க்கு கிடைக்கின்றது. வாங்கிவந்து என்ன செய்யலாம்? முதலில் கொஞ்சம் ஜில்லுனு இருக்கக்கூடிய தண்ணீரில் கொத்தமல்லி தழைகளை நன்றாக கழுவி விட வேண்டும். நீங்கள் கழுவுற தண்ணியில கொஞ்சமாக ஐஸ் வாட்டரை ஊற்றி கூட கழுவலாம். தவறு கிடையாது.

இரண்டு மூன்று முறை ஜில்லுனு இருக்கக்கூடிய தண்ணீரில் கொத்தமல்லித்தழையை கழுவி விட்டு, இறுதியாக சாதாரண தண்ணீரில் ஒரு முறை சுத்தமாக அலசி, தண்ணீரை நன்றாக உதறி, ஒரு காட்டன் துண்டின் மேல் வைத்து நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு இந்த கொத்தமல்லி தழைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

coriander2

சாம்பாருக்கு ரசத்துக்கு போடும் போது எப்படி வெட்டுவோம்? அதேபோல் வெட்டிக் கொள்ளுங்கள். மேல் சொன்ன விஷயங்களை செய்யும் போது, கொத்தமல்லியின் கட்டை அவிழ்க்க வேண்டாம். அப்படியே பிரித்து பார்த்துவிட்டு திரும்பவும் கொத்தாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நறுக்குவதற்கு சுலபமாக இருக்கும். முதலில் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, மீதமிருக்கும் கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நறுக்கிய இந்த கொத்தமல்லி தழைகளை காட்டன் துணியில், நன்றாக பரப்பி போட்டு, மேலே ஒரு காட்டன் துணியை போட்டு மல்லி தலையில் தண்ணீர் இல்லாத படி துடைக்க வேண்டும். முடிந்தால் வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து எடுக்கலாம். அப்படி இல்லையென்றால் வீட்டிற்கு உள்ளேயே ஒரு டேபிளின் மேல் பரப்பி வைத்துவிட்டு, மூன்றிலிருந்து நான்கு நாட்கள் உலர வைத்து விடுங்கள். ஆனால் வெயிலில் காய வைப்பது சிறந்தது.

coriander4

இந்த மல்லித்தழை அப்படியே மொறுமொறுவென நொறுங்கும் அளவிற்கு மாறிவிடும். சுத்தமாக ஈரத்தன்மை காய்ந்த பின்பு, காற்றுப் புகாத, ஈரமே இல்லாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். வெளியிலும் வைத்துக் கொள்ளலாம். 6 மாதங்கள்வரை கெட்டுப் போவதற்கு வாய்ப்பு கிடையாது.

coriander3

கைபடாமல் இந்த பொடியை ஒரு ஸ்பூன் ரசத்திற்கு, சாம்பாருக்கு பயன்படுத்தி பாருங்கள். பச்சை கொத்தமல்லி தழையை போட்ட வாசம் கிடைக்கும். இந்த கொத்தமல்லித்தழை பொடியை, காய்கறிகள் வறுவல், பொரியலில் கூட சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் செவ்வாய் தோறும் இதை செய்து பாருங்கள்! சண்டை போட்டவர்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ராசியாகி விடுவார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.