சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் செவ்வாய் தோறும் இதை செய்து பாருங்கள்! சண்டை போட்டவர்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ராசியாகி விடுவார்கள்.

murugan-rice
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் குடும்பத்தார் மகிழ்வுடன் இருப்பதை பார்க்கும் பொழுது சிலருக்கு ஏக்கமாக இருக்கும். நம் வீட்டில் மட்டும் தினமும் ஏன் இப்படி சண்டை நடந்து கொண்டே இருக்கிறது? என்று வருத்தமாக இருக்கும். சண்டை போடாத வீடுகளே இல்லை என்றெல்லாம் கூற முடியாது. எப்போதாவது சண்டை போடுவது என்பது சகஜம் தான் என்றாலும், சில வீடுகளில் தினமுமே சண்டை நடந்து கொண்டிருக்கும்.

sad-crying4

அவர்களுக்கு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு போகவே மனம் வராது. போனால் எப்படியும் ஒரு வாய் சாப்பாடு கூட அந்த வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாது என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். இது போன்று தொடர்ந்து ஒரு வீட்டில் சண்டை நடந்து கொண்டே இருந்தால் அதை தீர்ப்பதற்கும் பரிகாரம் உள்ளது. முறையாக இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் சண்டை போட்டு இருப்பவர்கள் விரைவில் ஆச்சரிப்படும் அளவிற்கு ராசியாகி ஒன்றாக சேர்ந்து விடுவார்கள்.

- Advertisement -

அவர்களுக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கி விடும். ஒற்றுமை அதிகரிக்கும். இது கணவன் மனைவிக்கு மட்டுமல்ல! எந்த வகையில் வீட்டில் இருவர் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். அது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள விருக்கிறோம். எளிமையான இந்த பரிகாரத்தை வீட்டில் எப்படி செய்யலாம்?

vilakku-poojai

இந்த பரிகாரத்தை ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் செய்யலாம். செவ்வாய்க்கிழமையில் கட்டாயம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும் என்பதும் நினைவில் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையில் வீடு முழுவதும் துடைத்து, பூஜை அறையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் சாமி படங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்து கொண்டு விளக்கு ஏற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு வெள்ளைக் காகிதத்தில் இனி எந்த காரணம் கொண்டும் வீட்டில் சண்டை வரக் கூடாது. எல்லோரையும் போல நாமும் ஒற்றுமையாக மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்னும் உங்களுடைய வேண்டுதலை கோரிக்கையாக எழுதிக் கொள்ளுங்கள். அதனை ஒரு சிறிய தாம்பூல தட்டில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். காகிதத்தின் மேல் சிறிதளவு உதிரிப் பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்தால் தான் பலன் அளிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

rice

அது போல் ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் பச்சரிசி அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு அரிசியை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலும் உதிரிப் பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வழக்கம் போல் தூப, தீப, ஆராதனைகள் செய்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இது போல் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் பொழுது தீட்டு ஏற்பட்டால் அந்த வாரத்தை தவிர்த்து அடுத்த வாரத்தை சேர்த்து கொள்ளலாம்.

- Advertisement -

one rupee

ஒவ்வொரு வாரமும் புதிதாக அரிசி, பூ மற்றும் நாணயங்களை மாற்ற வேண்டும். நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்பது நாணயங்கள் அந்த மஞ்சள் துணியில் சேர்ந்த பிறகு பரிஹாரம் நிறைவு பெறும். அப்போது அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலில் இதனை சமர்ப்பித்து விட வேண்டும். அதே போல் நீங்கள் எழுதி வைத்திருக்கும் அந்த காகிதத்தையும் உண்டியலில் போட்டு விட வேண்டும். அரிசியை பறவைக்கு உணவாக கொடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் நிச்சயமாக குறையத் தொடங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாக இருக்கவும் செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் 1 பவுர்ணமி இதை செய்தால் தீராத கடனும் நொடியில் தீரும்! குப்பையில் இருப்பவர்களும் கோபுரத்தில் ஏறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -