தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

- Advertisement -

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 2,09,163 பயணிகளுக்கு கொரோனா குறித்த ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 15,298 பேர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், 116 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 743 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுளளதாகவும், அதில் 608 பேருக்கு கொரோனா இல்லை என்றும், 15 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், அதில் ஒருவர் குணமாகிவிட்டார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு Dr C.விஜய பாஸ்கர் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

வரும் முன் காப்பதே நல்லது தான். ஒரு பக்கம் அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தாலும் வந்த பின்னால் என்ன செய்வது என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. இது அரசின் கடமையாகும். படுக்கை வசதிகள் இல்லை, வெண்டிலேட்டர்கள் இல்லை என்ற செய்திகள் உண்மை இல்லை. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முன்னேற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் உள்ள KMC, GH, Stanley போன்ற அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ்-க்காக தனியாக வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் தனியார் மருத்துவமனையான CMC மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இங்கு கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடம் புதிதாக அமைக்கபட்டுள்ளது. இந்த ஆய்வு கூடத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள நபர் ஒன்றுக்கு 4500/- ரூபாய் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏழை எளியோர்களுக்கு இலவசமாகவும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

corona-test

இந்த வைரஸ் குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனி சிறப்பு மருத்துவமனை போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகிறது. நாளைக்குள் தனி மருத்துவமனை தயாராகிவிடும் என்று கூறியுள்ளார். எது எப்படியோ வந்த பின்னால் அவதிபடுவதை விட வருமுன் நம்மை காத்து கொள்வது தான் புத்திசாலிதனம். அரசின் கட்டுபாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கொரானாவை ஒழிப்போம் என்ற உறுதி கொள்வோம்.

English Overview:
Here we have Coronavirus treatment in Tamil. Corona prevention. Corona virus in Tamil. Coronavirus remedy. Coronavirus cure in Tamil.

- Advertisement -