- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இனி புது துணிகளை எத்தனை முறை துவைத்தாலும் பழைசாகாது. இதை 1 ஸ்பூன் துணி அலசும்...

இனி புது துணிகளை எத்தனை முறை துவைத்தாலும் பழைசாகாது. இதை 1 ஸ்பூன் துணி அலசும் தண்ணீரில் கலந்து விட்டால் துணி எப்போதும் புதுசு போல இருக்கும்.

- Advertisement -

இந்த காட்டன் துணிகளை துவைத்து பராமரிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு வேலை தான். காட்டன் சட்டை, காட்டன் வேட்டி, காட்டன் புடவைகளை, துவைத்தால் அதற்கு கஞ்சி போட்டு அயன் பண்ண வேண்டும் என்ற கஷ்டம். இதனாலேயே பெரும்பாலும் காட்டன் துணிகளை அதிக அளவில் நிறைய பேர் பயன்படுத்த மாட்டார்கள். காட்டன் துணிகளில் கிடைக்கும் அழகு வேறு எதிலும் கிடைக்காது. மிக மிக சுலபமான முறையில் காட்டன் துணிகளை புதுசு போலவே வைத்துக்கொள்ள ஒரு சூப்பரான டிப்ஸ் இந்த குறிப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் படித்து பயன் பெறலாம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஜவ்வரிசி. முதலில் ஒரு 50 கிராம் அளவு ஜவ்வரிசியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீரை ஊற்றி விடுங்கள். அந்த ஜவ்வரிசி மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் அதிகமாகவே தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை கைவிடாமல் கலந்து காய்ச்ச வேண்டும். ஜவ்வரிசி நன்றாக வெந்து கொழ கொழப்பாக வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, இது சூடாக இருக்கும் போதே ஒரு வடிகட்டியில் ஊற்றி அந்த ஜெல்லை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டீல் வடிகட்டி, வெல்லம் வடிகட்டும் வடிகட்டி இருக்கும் அல்லவா. அதில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். இந்த ஜல்லை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 2 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும்போது தேவையான அளவுகளில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். (ஆலோவேரா ஜெல் போல நமக்கு ஒரு ஜெல் கிடைத்திருக்கும்.)

- Advertisement -

அடுத்து காட்டன் சட்டையோ, காட்டன் புடவையோ எதுவாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கும் அளவிற்கு துவைத்துக் கொள்ளுங்கள். சட்டையாக இருந்தால் காலர் பகுதி கைப்பகுதிகளில் அதிகமாக அழுக்கு இருக்கும். கொஞ்சமாக வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு ஷாம்பு அல்லது துணி துவைக்கும் லிக்விட் பவுடர் போட்டு துணியை ஊற வைத்து சுத்தமாக துவைத்து ஒருமுறை நல்ல தண்ணீரில் அலசி விடுங்கள். அதன்பின்பு துணி ஈரமாக இருக்கும் அல்லவா. அந்த ஈரத் துணியை வைத்து தான் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

துணி துவைக்கும் பக்கெட்டில் தயார் செய்து வைத்திருக்கும் ஜவ்வரிசி ஜெல் 2 ஸ்பூன் எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசி ஜெல், இரண்டு காட்டன் சட்டைகளுக்கு சரியாக இருக்கும். இதோடு இரண்டு சட்டைகள் நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விடுங்கள். இப்போது இந்த தண்ணீர் லேசாக கொழ கொழப்பு தன்மையோடு இருக்கும் அல்லவா. இதில் துவைத்து ஈரமாக இருக்கும் இரண்டு சட்டைகளை நன்றாக நனைத்து அந்த தண்ணீர் எல்லா இடத்திலும் படும்படி பிரட்டி விடுங்கள். அதன் பின்பு இதை ரொம்பவும் கசக்கி பிழிய கூடாது. அப்படியே தண்ணீரோடு எடுத்து உடனடியாக கொடியில் சுருக்கம் இல்லாமல் காய வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அவ்வளவு தான். காய்ந்த பிறகு நீங்களே நம்ப மாட்டீங்க. நீங்கள் துவைத்த காட்டன் சட்டை அயன் செய்தது போல மொறுமொறுவென அவ்வளவு அருமையாக இருக்கும். கொஞ்சம் கூட சுருக்கம் இருக்காது. இதே போலத்தான் காட்டன் புடவைகளுக்கும் நீங்கள் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். இது ரொம்பவும் சிரமமாக இருக்கிறது என்று பார்க்க வேண்டாம். கஞ்சி போடுவது போல, சுலபமாக இதை செய்யலாம். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய காட்டன் துணிகள் எப்போதும் புதுசு போல இருக்க இந்த குறிப்பு ஒன்று போதும்.

பின் குறிப்பு: இந்த ஜவ்வரிசி ஜெல் செய்ய ஜவ்வரிசியை வேகவைத்து வடிகட்டி வைத்திருக்கிறோம் அல்லவா. அதை தூக்கி குப்பையில் போட வேண்டாம். அந்த வெந்த ஜவ்வரிசியில் கொஞ்சமாக பால் அல்லது தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விட்டால் சூப்பரான பாயாசம் தயாராகிவிடும். அதை நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சற்று முன்