கணவன் – மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்படாமல் இருக்க பரிகாரம்

thirumanam-logo

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண பந்தத்தின் மீது ஒரு அலட்சியமான மனநிலை கொண்டு, திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டு தினமும் தங்களுக்குள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் திருமண பந்தத்தை முறித்து கொண்டும் பிரிகின்றனர். இத்தகைய திருமண வாழ்வு சார்ந்த தம்பதிகள் சண்டையிட்டு கொள்ளாமல் ஒன்றாக வாழ பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

love-marriage

திருமணமான தம்பதிகள் எப்போதும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ பூஜையறையில், ராதை – கிருஷ்ணன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்து தினமும் அப்படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்கி வருவதால் தம்பதிகளுக்குள் மனஸ்தாபங்கள் சண்டைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வயதில் மூத்த தம்பதிகளின் ஆசீர்வாதங்கள் பெறுவதாலும் இளம் தம்பதிகள் வாழ்வில் நன்மைகள் பல ஏற்படும்.

திருமணமான நாள் முதல் வரும் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் சிவன் கோயிலுக்கு சென்று நந்தி பகவானுக்கு பச்சரிசி, வெல்லம், சேர்த்து படையல் வைத்து, நெய் விளக்கேற்றி வணங்க வேண்டும்.வழிபட்டு முடிந்ததும் படையல் பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும்.

marriage

பிரதோஷ தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், அப்பிரதோஷ தினத்தில் வீட்டிலேயே பச்சரிசி, வெல்லம் கலந்த உணவு படையலை உங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்காவதோ இருக்கும் காளை மாட்டிற்கு உணவாக கொடுக்க வேண்டும். பசு மாட்டோடு ஜோடியாக வளர்க்கப்படும் காளை மாட்டிற்கே மேற்கூறிய படையலை கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மகரம் ராசிக்கான பொது பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Couples fight pariharam in Tamil. It is also called Thirumana pariharam in Tamil or Kanavan manaivi otrumai pariharam in Tamil or Marriage pariharam in Tamil or Kanavan manaivi otrumaiyaga vazha in Tamil.