சொத்து தகராறு, கோர்ட் கேஸ் வழக்குகள், விரைவில் ஒரு முடிவுக்கு வர, இதை விட சுலபமான பரிகாரம் வேறு எதுவும் இருக்க முடியாது. 6 வாரங்களில் கைமேல் பலனை அடையலாம்.

nagar

சொத்து இல்லாதவர்கள் கூட, அந்த சொத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பது இல்லை. ஆனால், பரம்பரை சொத்து உள்ளவர்களுக்கு பாகப்பிரிவினையில் ஏகப்பட்ட பிரச்சனை. சொத்து இல்லாதவர்களுக்கு ஒரே பிரச்சனை ‘சொத்து இல்லை’ என்பது மட்டும்தான். சொத்து உள்ளவர்களுக்கு அந்த சொத்தை வைத்து, பல பிரச்சனை சூழ்ந்திருக்கும். எத்தனை வம்புகள், எத்தனை வழக்குகள், சில இடங்களில் சொத்து பிரச்சினையால் கைகலப்பில் மூலம் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட சொத்து விவகாரங்கள் உங்களுடைய குடும்பத்திலும் உள்ளதா?

nagasilai1

வருடக்கணக்கில் கோர்ட்டில் கேஸ் வழக்குகள் நடந்து வருகிறதா? அந்த கோர்ட் கேஸ் உங்கள் பக்கம் தீர்ப்பாக வேண்டுமா? உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான பரிகாரம் தான் இது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய சொத்துகளாக இருந்தால் மட்டுமே, பரிகாரம் பலிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

இந்த பரிகாரத்தை 6 வாரங்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். நேரம் என்பது உங்களுடைய இஷ்டம்தான். காலை அல்லது மாலை இந்த இரண்டு நேரத்தில் சூரிய உதயத்திற்கு பின்பு, சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உச்சி வேளை என்று சொல்லப்படும் 12 மணி நேரத்தில் பரிகாரம் செய்யக் கூடாது.

nagaraja

உங்களுடைய வீட்டின் அருகில் பழமையான ஏதேனும் கோவில் இருந்தால், அந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யலாம். குறிப்பாக அந்த கோவிலில் பின்னி கொண்டிருக்கும் நாகர் சிலை, பிள்ளையார், பைரவர் இந்த 3 தெய்வங்களும் ஒன்றாக இருக்கவேண்டும்.

- Advertisement -

இப்படியாக இந்த மூன்று தெய்வங்களும் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லுங்கள். முதலில் காய்ச்சாத பசும்பாலை, நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்பு சுத்தமான தண்ணீரைக் கொண்டு நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து விட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ வைத்து, கண்களைத் திறந்து நாகர் சிலையை பார்த்தவாறு உங்களுடைய கஷ்டம் தீர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய், அடுத்தபடியாக பைரவரிடம் வேண்டிக்கொண்டு, ஒரு நல்லெண்ணெய் தீபம். இப்படியாக இந்த மூன்று பரிகாரத்தையும் 6 வாரம் வெள்ளிக்கிழமை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வருடக்கணக்கில் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த பரிகாரம் கட்டாயம் கொடுக்கும்.

bairavar

நம்முடைய பழமை வாய்ந்த கோவில்களில் அரச மரத்தடியில் வைத்திருக்கும் இந்த நாகர் சிலைக்கு எத்தனை மகத்துவம் இருக்கின்றது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதே கிடையாது. இப்படியாக பின்னிப் பிணைந்திருக்கும் இந்த நாகர் சிலையை தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களுடைய வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, பிரச்சினைகள் குறைந்து, அவர்களது வாழ்க்கை நோய் நொடி இல்லாமல், சுபிட்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது (WHO world health organisation) எனும் அமைப்பில் இன்றளவும் இந்த நாகங்கள் பின்னிக்கொண்டு இருக்கும் சிலையின் வடிவம் தான், சிம்பிளாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

WHO

நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நாகங்கள் பின்னி கொண்டிருக்கும் இந்த சிலைகளை வடிவமைத்து வைத்து, வழிபாடு செய்து வந்துள்ளார்கள் என்பது நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அறிவியல் பூர்வமாக சொல்லப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்யாமல் ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, ஆன்மிக ரீதியாக எதை சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

nagaraja

இதனால் தான் நம் முன்னோர்கள் நல்லது என்று நமக்காக சொல்லி வைத்த விஷயங்கள், பல நமக்கு தெரியாமலே அழிந்து போய்விட்டது. நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களை, சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து வந்தாலே நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வு சுலபமாகக் கிடைத்துவிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.