கறுத்துப்போன கவரிங் நகையை புதுசு போல பளப்பளன்னு ஜொலிக்க வைக்க, வெறும் 5 நிமிடமும், வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களே போதும்.

chain
- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் கருத்துப்போன கவரிங் வளையல், செயின், கம்மல் எதுவாக இருந்தாலும் சரி, அதை ஐந்தே நிமிடத்தில் புதுசு போல ஜொலிக்க வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. கவரிங் நகை மட்டும் அல்ல. சில பேர் வெள்ளி நகைகள் கறுத்துப் போய் விட்டால் அதை கடையில் கொடுத்து பாலிஷ் போட்டு தான் புதுசு போல மாற்றுவார்கள். ஆனால் வெள்ளி நகைகளையும் இந்த முறையில் சுத்தம் செய்தால், ஐந்தே நிமிடத்தில் பளிச் பளிச்சென்று மாறிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகின்றோம்.

முதலில் இந்த நகையை சுத்தம் செய்வதற்கு நாம் எந்தெந்த பொருட்களை பயன்படுத்த போகிறோம் என்று பார்த்துவிடலாம். உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நன்றாகப் புளித்த தயிர். அதன் பின்பு சாம்பல். எந்த சாம்பலை எடுப்பது? அடுப்பில் இருக்கக்கூடிய சாம்பல் எடுத்துக் கொண்டாலும் சரி.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் பூஜை அறையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி பொருத்தி வைப்பீர்கள் அல்லவா. அது எரிந்து முடிந்த பின்பு அந்த அகல் விளக்கில் சாம்பல் இருக்கும் அல்லவா அதை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது ஊதுபத்தி எரிந்து முடிந்த பின்பு தட்டில் சாம்பல் கொட்டி இருக்கும் அல்லவா அந்த சாம்பலை எடுத்துக் கொண்டாலும் சரி. ஏதோ ஒரு சாம்பல் இருக்கட்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் சாம்பலை போட்டு அந்த சாம்பலில் புளித்த தயிரை ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நகைகளை பள பளன்னு ஜொலிக்க வைக்க இந்த பேஸ்ட் போதுங்க. உங்களுடைய கவரிங் நகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே இந்த பேஸ்டை தடவி லேசாக கையை வைத்து தேய்த்துக் கொடுங்கள்‌. ரொம்பவும் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். எல்லா இடங்களிலும் படும்படி இந்த பேஸ்டை அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் போல தேய்த்து விட்டு தண்ணீரில் கழுவி பாருங்கள். ரிசல்ட் உங்களுக்கே தெரியும்.

- Advertisement -

அடுத்து இதே பேஸ்டை எடுத்துக் கொள்ளுங்கள். கறுத்துப்போன வெள்ளி கொலுசு, குழந்தைகளின் தண்டை, வளையல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மேலே இந்த பேஸ்டை தடவி விட்டு ஐந்து நிமிடங்கள் உங்கள் கையை வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரில் கழுவி விட்டு ஒரு துண்டை வைத்து துடைத்துப் பாருங்கள். அந்த கறுத்துப்போன வெள்ளி பொருள் எப்படி பளபளப்பாக இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். பூஜை அறையில் இருக்கும் வெள்ளி விளக்கை கூட இந்த முறையில் சுத்தம் செய்யலாம்.

சரி இப்படி சுத்தம் செய்த கவரிங் நகைகள் மீண்டும் கருத்து போகாமல் இருக்க எப்படி ஸ்டோர் செய்து வைப்பது. ஒரு எவர்சில்வர் டப்பாவில் கொஞ்சமாக முகத்திற்கு போடும் பவுடரை போட்டு அதில் சுத்தம் செய்த கவரிங் நகையை போட்டு மூடி வைத்துவிடுங்கள். சுத்தம் செய்த நகை நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -