புற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்

Indian-cow
- Advertisement -

காலைப் பொழுதில் பசு முதன் முறையாக கழிக்கும் சிறுநீரை தான் கோமியம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நம் வீட்டில் ஹோமங்கள் வளர்க்கப்படும் போது இந்த கோமியத்தினை தீர்த்தமாகக் கொண்டு வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டில் உள்ள மூதேவி வெளியேறி விட்டு மஹாலக்ஷ்மி குடியேறுவார்கள் என்பது நமது நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகின்றது. இதே போன்று அந்த காலங்களில் மாட்டு சாணத்தை வீட்டு வாசலில் மெழுகி கோலம் போடுவார்கள். மாட்டு சாணத்திற்க்கு இயற்கையாகவே கிருமிநாசினி உண்டு. வீட்டில் விஷபூச்சிகள் அண்டாமல் இருக்க இந்த பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். சில கிராமங்களில் இன்றைக்கும் இந்த பழக்கம் தொடரப்படுகிறது. அந்த சாணத்தை பிசைந்து தட்டி காயவைத்து வரட்டியாக மாற்றி சமைக்கும் எரிபொருளாக பயன்படுத்தி வந்தார்கள். யாகங்களுக்கு நெருப்பினை வளர்ப்பதற்கும் இதுதான் பயன்பட்டு வருகின்றது. கோமியத்தை நாம் அனைவரும் ஆன்மீக ரீதியாக பயன்படுத்தி வருகின்றோம்.

ஆனால் கோமியத்தை பலர் பருகுவதாகவும், முகம், கை கால்களை கழுவிக் கொள்வதாகவும் நாம் கேள்விப்பட்டிருப்போம். பசுவின் சிறுநீரான கோமியத்திற்கு மருத்துவ குண நலன்கள் உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்துதான் வருகின்றது. அந்தவகையில் கோமியத்தில் உள்ள மருத்துவ குண நலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போமா?

- Advertisement -

கோமியம்

‘கோமியம்’ என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் பசுவின் ‘சாணத்தை’ தான் குறிக்கின்றது. ‘கோமூத்திரா’ என்பது தான் பசுவின் சிறுநீரகத்தை குறிக்கும் வார்த்தை. ஆனால் கோமியம் என்றால் பசுவின் சிறுநீர் என்று தவறான பொருள் தற்போது பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. பசுவின் தலை முடி முதல் சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றது என்பதை ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.

- Advertisement -

Pasu

சத்துக்கள்

கோமியத்தில் டாக்சிக் பொருட்கள் இருக்கின்றது என்பது பரவலான கருத்து. ஆனால் கோமியத்தில் யூரியா, தாது, சத்துக்கள், உப்புக்கள், ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் போன்றவற்றுடன் 95% தண்ணீர் உள்ளது.

- Advertisement -

கல்லீரல்

பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ‘கோமூத்ரா ஹர்தகி’ என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மூளை

பசுவின் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், வெண்ணையுடன் பசுவின் சிறுநீரும் சாணமும் சேர்த்து தயாரிக்கப்படடுவது தான் ‘பஞ்சகவ்வியம்’. இந்த மருந்து ஆயுர்வேதத்தில் மூளை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது.

பெண்களின் முக அழகிற்கு

பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றார்கள். அது சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. அதற்கு பதிலாக பசுவின் பால், கோமியம் மற்றும் சாணத்தை முகத்தில் பயன்படுத்தினால் முகம் ஜொலிக்கும் என்று குஜராத்தின் பசு பாதுகாப்பு வாரியம் கூறியுள்ளது. எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்திதான் பேரழகியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோய்

பசு மாட்டின் கோமியம் மனிதனின் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்பது குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை ஒரு பாட்டிலில் அடைத்து, அதில் கோமியத்தை மாறுபட்ட அளவில் செலுத்தி சோதனை செய்தபோது ஓர் ஆண்டுகள் கழித்து புற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியத்தின் அளவை தெரிந்து கொண்டார்கள்.

இந்த சோதனையின் மூலம் வாய், கருப்பை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தோல் இந்த உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை கூட கோமியத்தை வைத்து குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முயற்சிதான். இந்த முயற்சி வெற்றி பெற்றால் கோமியத்தை கொண்டு மாத்திரை தயாரிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

கோமியத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரப்பும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ள வாதம், பித்தம், மற்றும் கபம் இவைகளை உடலில் சமநிலைபடுத்தவும் இந்த கோமியம் உதவி செய்கிறது. உடலில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. காய்ச்சல், அனீமியா, நுரையீரல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இது தடுக்கின்றது.

Pasu

விவாதம்

பசுவின் கோமியத்தில் மருத்துவக் குணங்கள் இருப்பது பல நூற்றாண்டுக்கு முந்தைய ஆயுர்வேத நூலில் கூறப்பட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு அது பொருந்துமா, என்பதை சிந்தித்து பார்த்து அதனை உபயோகிக்க வேண்டும். பசுவின் சிறுநீரின் குணாதிசயம், அந்தப் பசுவின் நிறத்திற்கு ஏற்றவாறு மாறும் என்று ஆயுர்வேத நூலில் கூறப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நாட்டு மாடுகள் இருந்தன. அவைகள் புல், வைக்கோல் போன்ற இயற்கை தாவர உணவுகளை மட்டும் உட்கொண்டு வளர்ந்தது. ஆனால் தற்போது செயற்கையான மருந்து, ஊசி, நவீனமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மாடுகளுக்கு கொடுக்கின்றனர். இதை உண்ணும் மாடுகள் தரும் கோமியமானது மருத்துவ குணத்தில் இருக்குமா என்ற சந்தேகம் உண்டு. சிலநேரங்களில் கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பசுவின் சிறுநீர் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஈகோலி(E-COLI) என்ற நோய்த்தொற்று பசுவிற்கு உள்ளதா என்பதை பரிசோதித்த பின்பே அந்த கோமியம் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும். சில வகையான ஆயுர்வேத மருந்துகளில் கோமியம் கலக்கப்பட்டாலும், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு முழுமையான அங்கீகாரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிக்கலாமே:
தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -