- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மயோனீஸ், சாஸ் இவை எதுவும் இல்லாமலேயே க்ரீமியான பிரட் டோஸ்ட்டை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே...

மயோனீஸ், சாஸ் இவை எதுவும் இல்லாமலேயே க்ரீமியான பிரட் டோஸ்ட்டை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திட முடியும்

- Advertisement -

காலை மற்றும் மாலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று இல்லாமல் சற்று வித்தியாசமாக இந்த பிரட் டோஸ்ட்டை செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானி பூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். இந்த உணவுகளில் மயோனீஸ், சாஸ் இதுபோன்ற பொருட்களை சேர்ப்பதால் தான் குழந்தைகள் இவற்றை மிகவும் விருப்பமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தும் சுவையான பிரட் டோஸ்ட்டை சுலபமாக செய்திட முடியும். இதை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் பிரட் டோஸ்ட் செய்து கொடுங்கள் என்று குழந்தைகள் உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

pani-poori

தேவையான பொருட்கள்:
பிரட் – 6 துண்டுகள், பெரிய வெங்காயம் – 1, சிறிய தக்காளி – 1, கேரட் – 1, கோஸ் – சிறிதளவு, பாலாடை – ஒன்றரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
தினமும் அனைவரது வீட்டிலும் பால் வாங்குவது என்பது வழக்கமான ஒரு விஷயம் தான். இதனை காய்ச்சும் பொழுது அதன் மேல் ஏடுகள் படிய ஆரம்பிக்கும். இவ்வாறு பாலினை காலை, மதியம், மாலை என மூன்று முறையும் காய்ச்சி வைக்கும் பொழுது அவற்றின் மேல் படிந்திருக்கும் பாலாடைகளை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பாலாடை எடுக்கும் பொழுது அதனை ஒரு கிண்ணத்தில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவேண்டும்.

milk

இவ்வாறு செய்வதன் மூலம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்படி சுட சுட பிரட் டோஸ்ட் செய்து கொடுக்கலாம். அதற்காக முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு கேரட் மற்றும் கோஸை தேங்காய் துருவலில் நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் துருவி வைத்துள்ள கேரட், கோஸ் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒன்றரை ஸ்பூன் பாலாடை சேர்த்து நன்றாக கலந்து விடும் பொழுது கிரீமியா பதத்திற்கு வந்துவிடும்.

carrot1

அதன் பிறகு ஒவ்வொரு பிரட் துண்டிலும் நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள இந்த கலவையிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து பிரெட் முழுவதும் நன்றாக பரப்பி விட வேண்டும். பிறகு அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து மூடி ஒரு தட்டின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆறு பிரட் துண்டுகளின் 3 பிரட் டோஸ்ட் செய்ய முடியும்.

bread-sandwich0

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் பிரட் டோஸ்ட்டை தோசை கல்லின் மீது வைத்து, அதனை தோசை கரண்டியை வைத்து அழுத்தி விட வேண்டும். பின்னர் மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். இவ்வாறு இரண்டு புறங்களும் நன்றாக சிவந்ததும் பிரட் டோஸ்ட்டை பரிமாறி கொடுக்கலாம். இவற்றை ஒரு முறை சுவைத்து விட்டால் போதும். மீண்டும் வேண்டும் என்று இதன் சுவைக்கு நமது வாய் ஏங்க ஆரம்பிக்கும்.

சற்று முன்