புல்வாமா தாக்குதல் : க்ரிக் பஸ் மற்றும் டி ஸ்போர்ட்ஸ் ஆகிய கிரிக்கெட் நிறுவனங்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா ?

Dsports

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர். சேவாக் போன்று கல்வி சம்மந்தப்பட்ட உதவியினை வழங்க முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் க்ரிக்பஸ் மற்றும் டிஸ்போர்ட்ஸ் போன்ற கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளனர்.

அதன்படி பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் லீக் மற்றும் அந்தநாட்டு கிரிக்கெட் போட்டி என எந்த விதமான விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இனிமேல் இந்த நிறுவனங்கள் ஒளிபரப்பாது. மேலும், செய்திகளையும் வெளியிடாது எனவும் தெரிவித்துள்ளன.

Ind-Pak

க்ரிக்பஸ் நிறுவனமானது உலக கிரிக்கெட் நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனங்களின் இந்த முடிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

நோபால் வீசினால் 500ருபாய் அபராதம். பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு. எந்த அணியின் பயிற்சியாளர் என்று பாருங்களேன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்