நோபால் வீசினால் 500ருபாய் அபராதம். பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு. எந்த அணியின் பயிற்சியாளர் என்று பாருங்களேன்

Noball

இந்தியாவில் இந்த ஆண்டு ரஞ்சி போட்டிகள் நடந்து முடிந்தன. இந்த தொடரில் விதர்பா அணி கோப்பையை கைப்பற்றி முதன்முறையாக வென்றுள்ளது. மேலும், தற்போது நடந்து முடிந்த ராணி கோப்பை போட்டியையும் வென்று அசத்தியுள்ளது.

vidarbha

ராணி கோப்பை வென்ற முழுப்பணத்தினையும் இந்த அணி புல்வாமா தாக்குதலில் பலியான குடும்பத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு வித்தியாசமான அபராதம் கொடுக்கும் வழக்கத்தினை வைத்துள்ளார்.

அதாவது வலைப்பயிற்சியில் அணி வீரர்கள் எவரேனும் நோபால் வீசினால் ஒரு நோபாலுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கும் பழக்கத்தினை வைத்துள்ளார். அதன் மூலம் வீரர்கள் பந்துவீசும் போது கவனக்குறைவின்றி சரியாக பந்துவீகிறார்கள் என்று அவர் நம்புகிறார்.

Faiz

இதனால் விதர்பா அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்துவீசுவது மட்டுமின்றி போட்டிகளின் போதும் நோபால் வீசாமல் பந்துவீசி வருகின்றனர். தேவையற்ற உதிரி ரன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அணி வெற்றிக்கு இது உதவும் என்றும் விதர்பா அணியின் பயிற்சியாளர் கூறினார்,

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : முகமது ஷமி அளிக்க இருக்கும் பெரிய அளவிலான நிதியுதவி – 44 குடும்பங்களுக்கும் சென்றடைய திட்டம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்