அட! இந்த ரிங் முறுக்கை செய்வது இவ்வளவு ஈசியான விஷயம் என்று தெரிந்தால் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இதனை அடிக்கடி செய்து கொடுப்பீர்கள்

ring
- Advertisement -

குழந்தைகள் என்றாலே அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் அழகான குறும்புத்தனம் தெரியும். அதே போல் அவர்கள் தொல்லை செய்யும் அளவிற்கும் குறையிருக்காது. குழந்தைகளுக்கு எந்த சமயத்தில் எதை சாப்பிட வேண்டும்? எதை கேட்க வேண்டும்? என்றெல்லாம் புரிய வைப்பது சற்று கடினமான விஷயம் தான். ஒரு சில குழந்தைகள் கடைகளுக்கு சென்றதும் அங்கு இருக்கும் பொருட்களைக் கையில் எடுத்துக் கொண்டு தனக்கு இப்போதே வாங்கி தர வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

அவ்வாறு தான் வீட்டிற்குள் இருக்கும் பொழுது திடீரென எனக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள் என்று தொல்லை செய்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற குழந்தைகளுக்கு சட்டென செய்து கொடுக்கும் இந்த ரிங் முறுக்கை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், உளுந்து மாவு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பட்டர் – ஒரு ஸ்பூன், எள்ளு – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 150 கிராம்.

செய்முறை:
முதலில் ஒரு கப் அரிசி மாவிற்க்கு ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைத்து, தண்ணீர் லேசாக சூடாகும் வரை காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் எள்ளு, ஒரு ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் உப்பு போன்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பொடி, ஒரு கப் அரிசி மாவு மற்றும் இறுதியாக ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து இவற்றை ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். பிறகு கரண்டியை வைத்து இவை அனைத்தையும் லேசாக கிளறி விட்டு, சிறிது நேரம் கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற வைக்க வேண்டும். பின்னர் இந்த மாவை நன்றாகப் பிசைந்துக் கொள்ளவேண்டும். மாவு பிசையும் பொழுது தண்ணீர் பற்றாதது போல் இருக்கும் ஆனால் இது தான் சரியான அளவாகும்.

சிறிது நேரம் நன்றாக பிசைந்ததும் மாவு அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகவும் சாஃப்டாக மாறிவிடும். பின்னர் இந்த மாவை ஒரு ஈரத்துணி போட்டு 10 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சிறிய உருண்டையாக எடுத்து பூரி மனையில் வைத்து மெல்லியதாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதாவது முறுக்கு குழாயில் முறுக்கு பிழியும் அளவிற்கு உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை சிறு சிறு துண்டுகளாக ரிங் வடிவில் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் சூடானதும் அனைத்தையும் பொரித்து எடுக்க வேண்டும்.

- Advertisement -