வீட்ல தோசை மாவு இல்லையா? சட்டுனு 5 நிமிஷத்துல மொரு மொரு தோசை செய்ய இந்த மாவை ரெடி பண்ணிக்கோங்க!

dosai

வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்ற கவலை இனி தேவையே இல்லை. சட்டென பத்தே நிமிடத்தில் இந்த மாவை இன்ஸ்டன்டா ரெடி பண்ண முடியும். எந்தெந்த பொருட்களை வைத்து இந்த மாவை தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை உங்க வீட்ல கட்டாயம் ஒரு வாட்டி செஞ்சு பாருங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபிக்கு நாம பயன்படுத்தப் போகும் பொருள் என்ன தெரியுமா? பிரட்டும் ரவையும் தான். வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.

bread1

முதலில் இந்த தோசையை செய்ய தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். பெரிய துண்டுகளாக இருந்தால் 5 லிருந்து 6 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை – 1 கப் (200 கிராம்), தயிர் – 1/2 கப், தேவையான அளவு உப்பு, சுடு தண்ணீர் 1 1/2 கப், ஒரு சிட்டிகை சோடா உப்பு.

ரவையை எந்த கப்பில் அளந்து எடுக்கிறீர்களோ, அதே கப் அளவு புளிக்காத தயிரையும் அளந்து எடுத்து வைக்க வேண்டும். புளித்த தயிரை ஊற்றினால், தோசையில் புளிப்பு சுவை தெரியும். ரவையை அளந்த அதே கப்பில் 1 1/2 கப் தண்ணீரையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

bread2

முதலில் பிரட் துண்டுகளின் ஓரத்தில் இருக்கும் சிவப்பு நிறத்தை வெட்டி எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சிறு ரவை போல இந்த ரொட்டித் துண்டுகளை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு அதே மிக்ஸியில் அரைத்த ரொட்டியோடு, ரவையையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, தயாராக இருக்கும் தயிரை ஊற்றி, வெதுவெதுப்பான சுடு தண்ணீரையும் ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும். 15 செகண்ட் இலிருந்து 20 செகண்ட்ஸ் அரைத்தால் கூட போதும். மாவு தயாராகிவிடும். ரொம்பவும் மொழுமொழுவென்று மாவு அரையும் வரை மிக்ஸியை ஓட விடாதீர்கள்.

- Advertisement -

அதன் பின்பு இதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு, நன்றாக கலந்து உடனடியாக தோசை வார்த்தால் சூப்பரான கிரிஸ்பியான தோசை உங்களுக்கு கிடைக்கும்.

dosa1

இந்த தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஊற்றிய வெதுவெதுப்பான தண்ணீரை போதுமான அளவாக இருக்கும். தேவைப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் அளவு அதிகமாக தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரண மாவு தோசை போலவே கல்லில் ஊற்றி தேய்த்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

dosa2

ட்ரை பண்ணி பாருங்க குழந்தைகள் இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சாம்பார் எதை வேண்டுமென்றாலும் இதற்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். ஹோட்டல் மசாலா தோசையை விட இந்த தோசை கிரிஸ்பியா வரும்.

இதையும் படிக்கலாமே
பூஜை அறையில் நாணயங்களை இப்படி வைப்பதால் பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்! தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.