பூஜை அறையில் நாணயங்களை இப்படி வைப்பதால் பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்! தெரிந்து கொள்ளுங்கள்!

lakshmi-coins

நாணயங்களில் நாராயணரும், லக்ஷ்மி தேவியும் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் குபேரருக்கு நாணய அர்ச்சனை செய்யப்படுகிறது. குபேரர் மட்டுமல்ல, நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. அத்தகைய நாணயங்களை பூஜை அறையில் எப்படி வைக்க வேண்டும்? பூஜை அறையில் நாணயங்களை வைப்பதால் என்ன பலன்? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

coins

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை சேமிப்பதன் மூலம் அந்த வீட்டில் வருமானம் அதிகரிக்கும். ஆனால் எப்பொழுதும் வீட்டில் சில்லரை நாணயங்களை ஆங்காங்கே போட்டு வைப்பது என்பது கூடாத விஷயம். சில்லறைகளை கண்ட இடத்தில் போட்டு வைப்பது மகாலட்சுமி கடாட்சத்தை சீர்குலைக்கும். குழந்தைகளுக்கு நாணயங்களை சேகரிக்க கற்றுக் கொடுக்கலாம். அது போல் கோவில்களுக்குச் செல்ல உண்டியல்களில் நாணயத்தை சேகரித்து வரலாம். அதை தவிர வீட்டில் நாணயங்கள் அதிகமாக இருப்பது நல்லதல்ல.

பூஜைக்கு தனியாக நாணயங்களை ஒரே மாதிரியாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். குபேரனுக்கு ஐந்து ரூபாய் நாணயங்களை அர்ச்சனை செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அது போல் கல் உப்பில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைப்பது பண வரவை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அந்த வகையில் நாணயத்தை வைத்து இந்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்க செய்யலாம். இதனால் பணம் பல வழிகளிலும் வந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

silver-bowl

வெள்ளி பொருட்களுக்கும், சுக்கிரனுக்கும் தொடர்பு உண்டு. வெள்ளியில் சுக்கிரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. பூஜை அறையில் வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை போட்டு வைக்கலாம். இப்போது புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயமும் இருப்பதால் அதையும் சேர்த்து போடுங்கள் தவறில்லை.

- Advertisement -

இப்படி நாணயங்களை வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைக்கும் பொழுது அதனுடைய அதிர்ஷ்டமே தனி தான். சிறிய வெள்ளி கிண்ணம் ஆக இருந்தாலும் போதும்! அதில் நாணயங்களை நிரப்பி வைத்து, பூஜை அறையில் வடக்கு திசையில் வைத்து விட வேண்டும். அந்த நாணயங்களுடன் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும், ஒரே ஒரு ஏலக்காயையும் போட்டு வையுங்கள். செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளை தவிர்த்து மற்ற கிழமைகளில் அதிலிருக்கும் நாணயங்களை எடுத்து செலவு செய்யலாம். மீண்டும் புதிய நாணயங்களை சேர்த்துக் கொண்டே வரலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் மட்டும் அதில் இருக்கும் நாணயங்களை எடுத்து விடாதீர்கள்.

silver-bracelet

பெண்கள் விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும் என்பார்கள். நீங்கள் தங்க மோதிரம் அணிந்து இருப்பதை விட ஒரே ஒரு வெள்ளி மோதிரத்தை எப்போதும் கலாட்டாமல் அணிந்து கொண்டு இருங்கள். இதனால் உங்களுடைய கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது பெண்களுக்கு நிச்சயமாக நடக்கக்கூடிய சூட்சம விஷயங்களில் ஒன்றாகும். வெள்ளி மோதிரம் அணியும் பெண்களுக்கு தடையில்லாத பணவரவும், அதிர்ஷ்ட யோகம் வந்து சேர்வதாக சில ஜோதிட குறிப்புகள் குறிப்பிடுகிறது. அது போல் நீங்கள் அஞ்சரை பெட்டியில் நீங்கள் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். நல்ல ஒரு பணவரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது ஏன்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.