- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மொறுமொறுவென, சுவையுடன் இருக்கும் இந்த வாழைப்பூ வடையை செய்து கொடுத்து அனைவரையும்...

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மொறுமொறுவென, சுவையுடன் இருக்கும் இந்த வாழைப்பூ வடையை செய்து கொடுத்து அனைவரையும் குஷி படுத்துங்கள்

- Advertisement -

சில உணவு வகைகளை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி விருப்பமாக சாப்பிடுவதில்லை. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து விடுகின்றனர். உடலுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் சாப்பிடுவதற்கு ருசியாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இதனை ஒதுக்குபவர்கள் பலர். ஆனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவ்வாறு வாழைப்பூவில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் அல்சர் பிரச்சனை குறையும். இதயம் வலுவுடனும், உடல் மிகவும் சுறுசுறுப்புடனும் இருக்கிறது. இதனை பலரும் சாப்பிட விரும்பப்படுவதில்லை. எனவே மொறுமொறுவென சுவையுடன் இருக்கும் வகையில் இதனை வடையாக செய்து கொடுக்கும் பொழுது இதன் சுவையை விரும்பி சாப்பிடுகின்றனர். அவ்வாறு செய்யக் கூடிய இந்த வாழைப்பூ வடையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

valaipoo

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – ஒரு கப், கடலை பருப்பு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், சோம்பு – கால் ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 200 கிராம் கடலைப் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர் அதனுடன் கால் ஸ்பூன் சோம்பு, 3 காய்ந்த மிளகாய் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கடலைப் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

kadalai-paruppu

பிறகு வாழைப்பூவை உள்ளிருக்கும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பெரிய வெங்காயம் ஒன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, பூண்டை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள கடலை மாவில் உப்பு கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வாழைப்பூ, இஞ்சி, பூண்டு மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

vadai

பின்னர் வடை இரண்டு புறமும் நன்றாக சிவந்து வருமாறு வெந்ததும் வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு கலந்து வைத்துள்ள மாவு அனைத்திலும் வடை சுட்டு எடுக்க வேண்டும். இதனை சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி கொடுத்து பாருங்கள். எவரும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்.

சற்று முன்