காகம் இதெல்லாம் உங்கள் வீட்டில் கொண்டு வந்து போடுகிறதா? அப்டின்னா இது தான் நடக்கும்!

crow-kagam

பழங்காலம் முதலே காகத்தை சகுன அறிகுறியாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். காகம் பித்ரு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் அமாவாசையில் காகத்திற்கு எச்சில் படாமல் படையலில் இருந்து முதல் உணவு வைக்கப்படுகிறது. காகம் கரைவது முதல் எச்சம் இடுவது வரை அனைத்துமே சகுன பலன்களை சொல்லும் என்று நம்பப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் காகம் கொண்டு வந்து போடும் பொருட்களுக்கும் பலன்கள் உண்டு. அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

crow-touch

காகம் ஒருவருடைய உடம்பின் மீதோ, அவர் பயன்படுத்தும் வாகனத்தின் மீதோ, குடையின் மீதோ, காலணியின் மீதோ தன் சிறகை கொண்டு தீண்டி விட்டு செல்வது அவ்வளவு நல்லதல்ல! இது அவருக்கு வர இருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறிவுறுத்துகிறது. அவர்களுக்கு அகால மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது. இத்தகையவர்கள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.

நீங்கள் வெளியில் எங்காவது செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நேரெதிரே நீங்கள் செல்லும் திசையை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. காகம் சனி பகவானுடைய வாகனமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் புண்ணிய கர்மத்திற்கு ஏற்ப காகத்தின் மூலம் சில அறிகுறிகளை இறைவன் உங்களுக்கு உணர்த்துவார். அது போல் ஒரு விஷயம் தான் இதுவும். முற்றத்தில் தலை இடித்து விட்டால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு செல்ல சொல்வார்கள். இதெல்லாம் பயமுறுத்த கூறப்படுவது அல்ல! ஏதோ ஒரு அறிகுறியின் மூலம் வர இருக்கும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சொல்லப்பட்டுள்ள ரகசியங்கள் ஆகும்.

உங்கள் வீட்டில் காகம் ரத்தின கற்கள், பூக்கள், பழங்கள் போன்ற ஏதாவது ஒன்றை போட்டு விட்டு பறந்து சென்றால் அந்த வீட்டில் ஆண் வாரிசு வர இருக்கிறது என்று அர்த்தமாகும். அதுவே தான் வீடு கட்ட பயன்படுத்தும் குச்சி, புல், நார், சனல், கம்பி போன்ற ஏதாவது ஒரு பொருளை போட்டு விட்டு சென்றால் அந்த வீட்டில் பெண் வாரிசு வர இருக்கிறது என்று அர்த்தமாகும்.

- Advertisement -

காகம் உங்கள் வீட்டில் ஈரமாக இருக்கும் மண் அல்லது மணல், பூக்கள், காய்கள், பழங்கள், நெல், தானியம் போன்றவற்றை கொண்டு வந்து போட்டு விட்டு சென்றால் அந்த வீட்டில் அந்தந்த பொருட்களுக்கு உரிய லாப பலன்கள் கிட்டுமாம். காகம் தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல பார்க்க நேர்ந்தால் அது சுப சகுனம் ஆகவே கருதப்படுகிறது. நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

crow

உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரம் போன்ற ஏதாவது ஒரு பொருளை காகம் கொண்டு செல்ல நேர்ந்தால் அது அபசகுணம் ஆகும். உங்கள் வீட்டில் இருந்து கொண்டு, காகம் சூரியனைப் பார்த்து கரைந்து கொண்டு இருந்தால் அதுவும் அபசகுனம். இது போன்ற விஷயங்கள் வீட்டில் நடைபெற்ற உடனே குலதெய்வ வழிபாடு செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சிவந்த பொருட்கள், மலர்கள் என்ற எந்த வகையிலும் சிவப்பு நிறத்தில் ஏதாவது கொண்டு வந்து போட்டால் உங்களுக்கு நெருப்பினால் ஆபத்து வர இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

crow

காகம் நீங்கள் வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு வலப்புறமிருந்து இடப்புறம் பறந்து சென்றால் லாபமும், இடது புறம் இருந்து வலப்புறம் பறந்து சென்றால் செல்லும் காரியம் நஷ்டமும் ஏற்படும் என்பது சகுனமாகும். அது போல காகம் கரையும் திசைகளும், அதற்குரிய பலன்களையும் பார்ப்போம்: காகம் கரையும் திசைகளும் பலன்களும்:

கிழக்கு திசை:
அரசு வழி ஆதரவு பெருகும்
பொன்னாபரண சேர்க்கை உண்டாகும்
நட்பு வட்டம் விரியும்
நல்ல உணவு கிடைக்கும்

Kagam

தென்கிழக்கு திசை:
தங்கத்தால் லாபம் பெருகும்
வடக்கு திசை:
வாகனத்தால் லாபம், வாகனச் சேர்க்கை உண்டாகும்
வஸ்திரத்தால் லாபமும், புது வஸ்திர சேர்க்கையும் உண்டாகும்.

தென்மேற்கு திசை:
தயிரால் லாபம்
எண்ணெய் பொருட்களால் லாபம்
உணவுப் பொருட்களால் லாபம் அல்லது
உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் பெரும் அதிர்ஷ்டம் வரும்

Crow

மேற்கு திசை:
நெல், தானியத்தால் லாபம்
முத்து பவளம் போன்றவற்றால் லாபம்
கடலில் இருந்து கிடைக்கும் பொருளால் லாபம் பெருகும்