உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வழிபடுங்கள்

sivan
- Advertisement -

விதியை ஞானம் அடைந்தால் வென்று விடலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த ஞானம் என்றால் என்னவென்றே அறியாமல் இருப்பதால் அவர்களின் கர்மவினைப்படி வாழ்வில் அனைத்து விதமான இன்ப துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். எல்லாம் வல்லவராக இருக்கும் சிவபெருமானை சரண் புகுவோருக்கு நன்மைகள் எப்போதும் உண்டு. இப்படியான வல்லமை கொண்ட தெய்வமாக சிவன் வீற்றிருக்கும் திருக்கூடலையாற்றூர் “அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில்” சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

madurai sivan

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த வல்லபேஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான சிவபெருமான் நந்தன வல்லபேஸ்வரர் என்கிற பெயரிலும், அம்பாள் ஞானசக்தி, பராசக்தி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக அபூர்வமான கல்லால மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் பிரம்ம, அகஸ்திய, கார்த்தியாயன ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வெள்ளாறு, மணிமுத்தாறு கூடுமிடம் சங்க தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் புராணகாலத்தில் தட்சிணப் பிரயாகை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட சிவாலயமாக இந்த வல்லபேஸ்வரர் கோயிலில் இருக்கிறது.

- Advertisement -

தல புராணங்களின்படி சோழ நாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் என்பவன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளை கொன்றுவிட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் வீடு,மனைவி, மக்களை இழந்து நாடெங்கும் சுற்றித்திரிந்தான். இந்தப் பகுதிக்கு வரும்போது ஒரு சொறி நாய் அவன் முன்னே சென்றது. அது இந்தப் பகுதியில் ஓடிய நதியில் மூழ்கி எழுந்ததும் தோற்றப்பொலிவு, முழுமையான ஆரோக்கியத்துடனும் வெளிவந்ததைக் கண்டு அதிசயித்தான் தினகரன் மகாராஜன்.

Sivan

எனவே அவனும் இந்த நதியில் மூழ்கி எழுந்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று, தனது நாடு செல்வம் ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றான். அந்த மன்னன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த இடத்தில் ஒரு சிவாலயத்தை மன்னன் கட்டினான். இரண்டு நதிகள் கூடும் இடம் என்பதால் இந்த ஊருக்கு திருக்கூடலையாற்றூர் என்கிற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் மன்னன் கட்டிய கோவில் சிதிலமடைந்து அதில் இருந்த சிலைகள் அனைத்தும் காணாமல் போயின. அப்போது அந்த ஊரில் வசித்த பொன்னப்ப குருக்கள் என்பவரின் கனவில் வந்த அம்மன் தான் ஆற்றில் சிலை வடிவில் இருப்பதாக கூறி மறைந்தாள். அதன்படி குருக்கள் ஆற்றில் இருந்த சிலைகளை மீட்டு தற்போது உள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.

- Advertisement -

அகத்திய முனிவருக்கு கார்த்தியாயனர் என்கிற ஒரு மகன் இருந்தான். அவனும் தனது தந்தையைப் போலவே மிகப் பெரிய ரிஷி ஆனான். இதன் பிறகு அகத்திய முனிவருக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும் என விரும்பி இங்குள்ள இறைவனை வழிபட்ட போது, மகாலட்சுமி தேவியே மணிமுத்தாறு நதி அருகில் இருந்த ஒரு குளத்தின் தாமரையில் குழந்தையாக தோன்றினாள். அக்குழந்தையை எடுத்து வந்த அகத்திய முனிவர் அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்தார். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டபோது இங்கு அகத்திய முனிவரிடம் அம்புஜவல்லி யாக வளரும் தனது பத்தினியான மகாலட்சுமி தேவியை மணம் செய்து கொண்டார்.

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்

- Advertisement -

பிரம்மாவும் சரஸ்வதியும் இந்த தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டு அவரின் நர்த்தனத்தை கண்டதால் இந்தக் கோயில் இறைவனுக்கு நர்த்தன வல்லபேஸ்வரர் என்கிற பெயர் ஏற்பட்டது எமதர்மராஜாவின் ஏவலரான சித்திரகுப்தனுக்கு தனி சன்னதி இருக்கும் வெகு சில கோயில்களில் இதுவும் ஒன்று.

sani bagavaan temple

இக்கோயிலில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார் ஏழரை சனி நடப்பவர்கள் சனிப் பிரதோஷம் அன்று இந்த பொங்கு சனீஸ்வரர் இறைவழிபாட்டால் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என கூறுகிறார்கள். குழந்தைகள் கல்வி அறிவு பெறவும் கல்வியில் சிறக்கவும், ஆற்றல் பெருகவும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர் வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் திருக்கூடலையாற்றூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில்
திருக்கூடலையாற்றூர்
கடலூர் மாவட்டம் – 608702

தொலைபேசி எண்

4144 – 208704

இதையும் படிக்கலாமே:
மனக்குறைகள் தீர இக்கோயிலுக்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Cuddalore narthana vallabeswarar temple in Tamil. It is also called as Thirukoodalaiyatrur vallabeswarar in Tamil or Kalvi sirakka in Tamil or Cuddalore temples in Tamil or Vallabeswarar kovil in Tamil.

- Advertisement -