புஜாராவின் ஆமை வேக ஆட்டம் இந்த பிட்ச்சிற்கு ஏற்றது தான் – ஆஸி வீரர் பளீர்

pujara

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது நடைபெற்று இன்னிங்சில் 443 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

pujara

இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்றாம் அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் நான்காம் நாளான இன்று இந்திய அணி 106 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் தேவை. இந்திய அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி 443 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது . கோலி மற்றும் புஜாரா பாட்னர்ஷிப் அணியின் எண்ணிக்கையை பெரிதாக்க உதவியது. அதனை போன்று ஒரு பாட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணியில் இருந்தால் தான் இது போன்ற போட்டிகளில் முடிவை மாற்ற முடியும்.

cummins

மேலும் இது போன்ற ரன்களை குவிக்க கடினமாக இருக்கும் ஆடுகளங்களில் நிதானமாக ஆடுவதே சிறந்தது. புஜாரா முதல் இன்னிங்சில் ஆடிய விதம் இந்த மைதானத்திற்கு ஏற்றது தான். மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது பொறுப்பினை நினைத்து விளையாடுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்கலாமே :

தமிழக மக்கள்தான் எனக்கு இதனை கற்றுகொடுத்தார்கள் – தல தோனி புகழாரம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்