தமிழக மக்கள்தான் எனக்கு இதனை கற்றுகொடுத்தார்கள் – தல தோனி புகழாரம்

dhoni

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரான சீனிவாசனின் கிரிக்கெட் வாழ்வின் 50ஆவது ஆண்டு விழா கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அதிரடி வீரருமான தோனி கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியும் கலந்து கொண்டார்.

dhoni 1

இவ்விழாவின் பொது சீனுவாசன் கடந்து வந்த பாதை குறித்த “காபி டேபுள்” என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியினை இந்திய வீரர் தோனி பெற்றுக்கொண்டார். புத்தகத்தினை பெற்றுக்கொண்ட தோனி தொடர்ந்து பேசத்துவங்கினார். தமிழக மக்கள் இத்தனை ஆண்டுகள் என் மீது காட்டிய அளவில்லா அன்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று துவங்கினார்.

மேலும் தமிழக மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையே என் ஆட்டத்தினை நிதானப்படுத்தி இன்று என்னை தலைசிறந்த ஒரு தலைவனாகவும், வீரனாகவும் மாற்றியுள்ளது என்று கூறினார். நான் IPL போட்டிகள் தொடங்கிய ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்றேன். சென்னை அணி தடைக்காலத்தின் போதும் தமிழக மக்கள் என்னை மறக்காமல் என்மீது அன்பு காட்டினர்.

dhoni 2

சென்னை என்னுடைய இன்னொரு வீடு என்று கூறுவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று. சொந்த நகரை விட இங்கு எனக்கு பன்மடங்கு மதிப்பும் அன்பும் நிறைந்துள்ளது. தமிழக மக்கள் என்னை அவர்களுள் ஒருவனாக நினைக்கின்றனர். இதுவே என்னை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவியது. தமிழக மண்ணின் கலாச்சாரம் என்னை நேர்மையான ஒருவனாக மாற்றியது என்று குறிப்பிட்டார் .

இதையும் படிக்கலாமே :

வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களுமா ? ஆஸி ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்