10 நிமிடத்தில் வித்தியாசமான தயிர் சட்னி இப்படி செஞ்சு பாருங்க, இனி சட்னி அரைக்க வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே தேட மாட்டீங்க!

thayir-curd-chutney_tamil
- Advertisement -

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக தயிரை வைத்து இப்படி ஒரு முறை கிரேவியான சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும். தயிர் கொண்டு செய்யப்படும் இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட! ரொம்ப டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த தயிர் சட்னி ரெசிபி எளிதாக எப்படி செய்வது? என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பூண்டு பற்கள் – 15, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலை பருப்பு – அரை டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், தண்ணீர் – அரை கப், தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

தயிர் சட்னி செய்வதற்கு முதலில் 15 பற்கள் அளவிற்கு பூண்டை தோல் உரித்து ஒரு உரலில் இட்டு நன்கு இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நீங்கள் இடித்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். இதில் வெங்காயம், தக்காளி போன்ற பொருட்களை நாம் சேர்க்கப் போவதில்லை எனவே பூண்டை பச்சை வாசனை இல்லாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூண்டு சுருள வறுபட்டதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக பிரட்டி விடுங்கள். இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலா வாசம் போக ஒரு நிமிடம் வதக்கி விட்டதும், அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நீர் நன்கு கொதித்து கால் பாகம் சுண்டியதும், அரை கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனி கேசரி செய்யும் போது இந்த ஒரு டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணி பாருங்க. ஹோட்டலில் கிடைக்கும் கேசரி போலவே அவ்வளவு சூப்பராக இருக்கும். இதை சாப்பிட்டா பிறகு கேசரின்னா இப்படித் தான் இருக்கும் என்று எல்லாரும் பாராட்டுவாங்க.

தயிர் சேர்த்ததும் கட்டிகளாக பிரிய ஆரம்பிக்கும். ஒரு விஸ்க் அல்லது கரண்டியால் நன்கு வேகமாக கலந்து விடுங்கள். கட்டிகள் கரைந்து விடும். பிறகு மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்கு சுண்ட வேக விடுங்கள். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து கெட்டியாக கிரேவி போல எண்ணெய் பிரிந்து தெளிந்து திரண்டு வரும். அவ்வளவுதான், சூப்பரான தயிர் சட்னி ரெடி! இந்த தயிர் சட்னி இட்லி, தோசைக்கு மட்டு அல்லாமல் சப்பாத்தி, சாதத்துக்கு கூட தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, இனி வெங்காயம், தக்காளி தேடவே மாட்டீங்க!

- Advertisement -