இனி கேசரி செய்யும் போது இந்த ஒரு டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணி பாருங்க. ஹோட்டலில் கிடைக்கும் கேசரி போலவே அவ்வளவு சூப்பராக இருக்கும். இதை சாப்பிட்டா பிறகு கேசரின்னா இப்படித் தான் இருக்கும் என்று எல்லாரும் பாராட்டுவாங்க.

- Advertisement -

கேசரி மிகவும் எளிமையாக அதே நேரத்தில் சட்டென்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வீட்டில் எந்த விசேஷமானாலும் இனிப்பு செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டால் முதலில் செய்வது கேசரியை தான். எல்லோரும் கேசரி செய்தாலுமே கூட கல்யாண வீடு, ஹோட்டலில் கிடைக்கும் கேசரி எப்பொழுதுமே ஒரு தனி சுவையில் நன்றாகவே இருக்கும். அதே போன்ற சுவையில் நாம் வீட்டில் கேசரி எப்படி செய்வது என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை -1 கப், சர்க்கரை – 3/4 கப், நெய் – 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ -1 சிட்டிகை, உப்பு -1 சிட்டிகை, ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன், முந்திரி -10, திராட்சை 10.

- Advertisement -

செய்முறை

கேசரி செய்ய முதலில் அடுப்பில் பேன் வைத்து அதில் நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடுப்படுத்தி கொள்ளுங்கள். சூடான எண்ணெய், நெய்யும் நன்றாக கலந்த அதில் இருந்து 3 ஸ்பூன் எண்ணெய் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்ததாக இதே நெய்யில் முந்திரி சேர்த்து லேசாக சிவந்து வரும் போது திராட்சை சேர்த்து உப்பி வரும் போது ரவை சேர்த்து விடுங்கள். ரவை சேர்த்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். ஐந்து நிமிடம் வரையிலாவது ரவையை வறுக்க வேண்டும். ரவை நன்றாக வாசம் வரும் போது சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சர்க்கரையை சேர்த்த பிறகு மீண்டும் 5 நிமிடம் வரை ரவையை கை விடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இந்த சமயத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் வைத்து தண்ணீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது ரவை சர்க்கரை எல்லாம் சேர்ந்து கரைந்து வரத் தொடங்கும் அந்த நேரத்தில் குங்குமப்பூவை சேர்த்து கொள்ளுங்கள். (ஒரு மணி நேரத்திற்கு முன்பே குங்கும பூவை வெந்நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை சேர்க்க வேண்டும்) குங்குமப்பூ இல்லாதவர்கள் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் உப்பு, ஏலக்காய் பொடி அனைத்தையும் கலந்த பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை இதில் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் மூன்று ஸ்பூன் எண்ணெயும் இதில் சேர்த்து பிறகு ஐந்து நிமிடம் கேசரியை மூடி போட்டு அப்படியே வேக வைத்து விடுங்கள்.

ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து பாருங்கள். கேசரியிலிருந்து நெய் எண்ணெய் எல்லாம் தனியாகப் பிரிந்து நல்ல ஒரு மனதுடன் பார்க்கவும் அழகான நிறத்தில் சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் கேசரி தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குடை மிளகாயை வச்சு இப்படி ஒரு சுவையான கிரேவி செஞ்சு பாருங்க. பத்து சப்பாத்தியை கூட சலிக்காமல் சாப்பிடுவாங்க. சூப்பரான இந்த கிரேவியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

எப்போதும் நாம் செய்வது போல் இல்லாமல் இந்த முறையில் ஒருமுறை நீங்கள் செய்து பாருங்கள் கேசரியின் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -