இப்போது வெயில் எல்லோரையும் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்று ஏசி இல்லாத வீடுகளே இல்லைஎன்றே சொல்லலாம். இந்த வெயில் காலத்தை சமாளிக்க ஏசியை பயன்படுத்தாமலும் இருக்க முடிவதில்லை. அப்படி ஏசியை பயன்படுத்தும் போது எகிறும் கரண்ட் பில்லை நினைத்தால்அதை விட பயமாக இருக்கிறது. இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாளெல்லாம் ஏசி ஓடினால் கூட கரண்ட் பில் அதிகமாக ஆகாமல் இருக்க ஒரு எளிமையான டிரிக்ஸ் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
முதலில் ஏசி வைத்திருக்கும் அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிக அளவு அடைச்சல் இல்லாமலும் ஏசியில் இருந்து குளிர் காற்று வரும் இடத்தில் எந்த ஒரு பொருளும் அடைப்பாக இல்லாமல் இருந்தால் தான் ஏசிலிருந்து வரும் கூலிங் உடனே அறை முழுவதும் பரவும். அப்படி அல்லாமல் அரை முழுவதும் அடைச்சலாக இருந்தால் கூலிங் ஆகவே நேரமாகும் இதனாலும் நமக்கு கரண்ட் பில் அதிகமாக ஏறும்.
ஏசியை நாம் அடிக்கடி ஆப் செய்து ஆன் பண்ண கூடாது. ஒவ்வொரு முறை ஆப் செய்து ஆன் பண்ணும் போது ஏசியில் இருக்கும் பேன் சுற்ற ஆரம்பிக்கும். ஒவ்வொரு முறை இப்படி பேன் சுற்ற ஆரம்பிக்கும் பொழுதும் கரண்ட் ஆனது மறுபடியும் ஏறும். இதனாலும் அதிக அளவில் கரண்ட் பில் எகிறும். இதற்கு பதில் அனைத்து ஏசியிலும் ஸ்டெபிலைசர் இருக்கும் அதை இயக்க ட்ரிப்பர் இருக்கும் அதை பயன்படுத்தி ஆப் ஆன் செய்யும் போது ஏசி கரண்ட் பில் அதிகமாக வராது.
நாமெல்லாம் நினைத்திருப்பது ஏசி போட்டால் பேன் போடக் கூடாது என்று தான். ஆனால் ஏசி போட்ட சிறிது நேரத்துக்கு பிறகு ஃபேன் போட்டால் தான் ஏசியின் குளுமை அறை முழுவதும் பரவும். அதன் பிறகு பேனை நிறுத்தி விட்டு ஏசியில் கண்ட்ரோல் கண்ட்ரோல் இருக்கும் அதை ஆன் செய்து விட்டால் ஏசி நீண்ட நேரம் கூலிங்காக இருக்கும்.
ஏசி பேன் இரண்டையும் போட்ட பிறகு அரை முழுவதும் குளுமை ஆன பின்பு ரிமோட்டில் ஸ்லீப்பிங் மோடில் மாற்றி வைத்து விட்டோம் என்றால் ஏசி இரவு முழுவதும் மிதமான குளுமையிலையே இருக்கும். இதனால் நாம் அடிக்கடி ஆப் செய்து ஆன் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. அது மட்டும் இன்றி கூலிங் அதிகமாக வைக்க வைக்க நமக்கு கரண்ட் பில்லும் அதிகமாகும்.
சில இடங்களில் ஏசியை பழுது பார்க்காமல் நீண்ட காலமாக அப்படியே பயன்படுத்துவார்கள் இதனால் ஏசியின் உள்புறம் முழு வதும் தூசு படிந்து இருக்கும் இப்படி இருந்தாலும் ஏசி அவ்வளவு சீக்கிரத்தில் கூலிங் ஆகாது. இதனாலும் கரண்ட் பில் அதிகமாகும்.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் தயிர் இருந்தா போதும் போட்டிருக்கும் கறுத்த வெள்ளி நகைகளை எல்லாம் பாலிஷ் செய்யாமலேயே புதிது போல மாற்றி விடலாமே!
ஏசியை பயன்படுத்தும் போது இந்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும் நாள் முழுவதும் ஓடினால் கூட அதிகமாக கரண்ட் ஏறமால் இந்த வெயில் காலத்தை முழுமையாக என்ஜாய் பண்ணலாம்.