உங்க வீட்டில் தயிர் இருந்தா போதும் போட்டிருக்கும் கறுத்த வெள்ளி நகைகளை எல்லாம் பாலிஷ் செய்யாமலேயே புதிது போல மாற்றி விடலாமே!

curd-silver-vessels-kolusu
- Advertisement -

வெள்ளி நகைகள் எப்பொழுதும் பளிச்சென இருக்க வேண்டும். வெள்ளி கொலுசு, வெள்ளி பூஜை சாமான்கள் போன்றவை வீட்டில் கட்டாயம் அனைவரும் வைத்திருப்போம். இந்த வெள்ளி பாத்திரங்களை மற்றும் கொலுசுகளை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். பித்தளை பாத்திரங்களை போல அல்லாமல் வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்வது என்பது வேறு விதமான வேலையாக இருக்கும். அப்படிப்பட்ட வெள்ளி நகைகளை எப்படி கொஞ்ச நேரத்தில் தயிரை வைத்து பாலிஷ் செய்யாமலேயே புதிது போல மாற்றுவது? என்பதைத்தான் இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளி கொலுசுகள் நாட்பட நாட்பட கறுத்து போய்விடும். இந்த கறுத்து போன வெள்ளி நகைகளை கூட புத்தம் புதிதாக வெள்ளையாக ஜொலிக்க செய்யலாம். இதற்கு கொஞ்சம் தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். தயிர் நன்கு புளித்து இருக்க வேண்டும். இந்த தயிரை ஒரு சிறிய அளவிலான டம்ளரில் எடுத்து அதற்குள் மூழ்கும்படி உங்களுடைய வெள்ளி கொலுசை போட்டு வைக்கவும்.

- Advertisement -

ஒருநாள் இரவு முழுவதும் நன்கு ஊறியதும் மறுநாள் காலையில் எழுந்து அந்த கொலுசை எடுத்து பழைய டூர் பிரஸ் ஏதாவது இருந்தால் அதை வைத்து தேய்த்து விடுங்கள். தேய்க்கும் பொழுது சிறிதளவு நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள். நன்கு பிரஷை வைத்து தேய்க்கும் பொழுது கொழுசில் இருக்கக்கூடிய கருப்பு முழுமையாக அகன்று விடும். நீங்கள் ஊற வைக்கும் பொழுதே பாதி அளவிற்கு நன்கு கருமை, அழுக்குகள் எல்லாம் தயிரிலேயே இறங்கி இருக்கும்.

சாதாரண தயிரிலேயே வெள்ளி பாத்திரங்களை எல்லாம் இதே முறையில் நீங்கள் பளபளக்க செய்யலாம். சிறிய அளவிலான பாத்திரங்கள் என்றால் இப்படி செய்யலாம். பெரிய பெரிய பாத்திரங்கள் எனில் புளித்த தயிரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து அப்படியே ஊற விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இதே போல ஸ்க்ரப்பரால் சிறிதளவு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தி தேய்த்துக் கொடுத்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.

- Advertisement -

தயிர் மட்டும் அல்லாமல் புளித்த பாலில் கூட இது போல நீங்கள் செய்யலாம். திடீரென பால் திரிந்துவிட்டால் அந்த பாலை நீங்கள் கீழே கொட்டி விட வேண்டாம். திரிந்த பாலில் வெள்ளி பாத்திரங்களை இரவு முழுவதும் ஊற விட்டுவிட்டு மறுநாள் நீங்கள் தேய்த்துப் பாருங்கள். நம்முடைய கொலுசா இது? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ அதே போல கொஞ்சம் கூட கருமை இல்லாமல் வெள்ளி கொலுசுகள் மின்னும்.

இதையும் படிக்கலாமே:
வாஷிங் மெஷின் பார்க்கவே ரொம்ப அழுக்கா இருக்கு மாத்தணும்னு நினைக்கிறவங்க இப்படி ஒரு முறை மட்டும் சுத்தம் பண்ணி பாருங்க. இனி பழைய மிஷினை மாத்தணும்கிற எண்ணமே உங்களுக்கு வராது.

அதே போல வெள்ளி பாத்திரங்களை தேய்ப்பதற்கு விபூதி பயன்படுத்தலாம். விபூதியை நன்கு கைகளால் அழுத்தம் கொடுத்து தேய்த்தால் வெள்ளி பாத்திரங்களில் இருக்கக்கூடிய கருமை எளிதாக அகன்ற விடும். அதன் பிறகு நீங்கள் டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்தாலே போதும் புதிது போல இருக்கும். மேலும் விபூதிக்கு பதிலாக நீங்கள் கோல்கேட் டுத் பவுடரை பயன்படுத்தலாம். இந்த டூத் பவுடரை வைத்து வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி தட்டுக்கள், டம்ளர்கள் போன்றவற்றை லேசாக கைகளாலேயே தேய்த்துக் கொடுத்தால் போதும் கொஞ்சம் கூட கருமை இல்லாமல் புதுசு மாதிரி இருக்கும். அவ்வளவுதாங்க, ரொம்ப சுலபமாக உங்களுடைய வெள்ளி பாத்திரங்களை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பளபளக்க செய்யுங்க!

- Advertisement -