பச்சை நிறம் மாறாத நச்சுன்னு ஒரு கருவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி? நாக்குக்கு ருசியா இனி இந்த சட்னியை சாப்பிடலாம்.

karuveppilai-chutney
- Advertisement -

கருவேப்பிலை சட்னி என்றாலே வீட்டில் இருப்பவர்கள் அலறி அடித்து ஓடி விடுவார்கள். 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட, 2 இட்லி தான் சாப்பிடுவாங்க. ஆனா இப்படி ஒரு முறை கருவாப்பிலை சட்னி அரைச்சு பாருங்க. சுட சுட சாதத்துக்கு கூட இந்த சட்னி வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அந்த அளவிற்கு ருசியான கருவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி தெரிந்து கொள்வோமா. எனக்கு ரொம்பவும் முடி கொட்டுது என்பவர்கள் வாரத்தில் இரண்டு நாள் இந்த சட்னியை செய்து சாப்பிடுங்க. பிறகு முடி கொட்டும் பிரச்சனை கூட நின்று விடும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உளுந்து – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 6, வேர்க்கடலை – 3 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு சிவக்க சிவக்க வறுத்து இந்த பொருட்களை எல்லாம் எடுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அதே கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும் அல்லவா. அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், கொட்டைப்பாக்கு அளவு – சிறிய துண்டு அளவு புளி, போட்டு நன்றாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் தோல் சுருங்கி வதங்கி வந்த பிறகு, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். தேங்காய் சூடாகி வந்த பிறகு 1 கைப்பிடி – கருவேப்பிலையை போட்டு ஒரு நிமிடம் வரை மட்டும் வதக்கி, அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடாயில் இருக்கும் சூட்டிலேயே கருவாப்பிலையை கைவிடாமல் வதக்கி கொண்டே இருங்கள். கருவேப்பிலையின் பச்சை வாடை நீங்கிவிடும். ஆனால் பச்சை நிறம் அப்படியே தான் இருக்க வேண்டும். (நன்றாக அழுத்தம் கொடுத்து ஒரு பெரிய கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இலசான கருவேப்பிலையாக இருந்தால் சட்னிக்கு கூடுதல் சுவை கிடைக்கும்.)

- Advertisement -

கடாய் சூட்டிலேயே கருவேப்பிலை வதங்கிய பின்பு இது அப்படியே ஆரட்டும். அதன் பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகைகளையும் வரமிளகாயையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அரைத்த இந்த பொடியோடு வதக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை சின்ன வெங்காயத்தை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, துவையல் போல கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். நைசாகவே அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னியை கட்டியாக வைத்து அப்படியே சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். அப்படி இல்லையென்றால் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கரைத்து இட்லி தோசைக்கும் தொட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து சட்னியில் கொட்டி மணக்க மணக்க சுவைத்தால் உங்களுக்கு இதன் ருசி புரியும். இந்த சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -