இப்படி ஒரு சட்னியா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வச்சுக்கலாம்.

curry-gravy
- Advertisement -

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுலபமான சட்னியிலிருந்து ஒரு கிரேவி, எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் அத்தியாவசியமான பொருட்களை வைத்தே இதை சுலபமாக செய்து விடலாம். இதில் நல்ல வாசனை இருக்கும். நல்ல ஆரோக்கியம் இருக்கும். நல்ல ருசி இருக்கும். சரி, இந்த புது விதமான சட்னிக்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி செய்வது? பார்த்து விடலாமா?

curry-leaves

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கிராம்பு – 2, சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், இஞ்சி – 1 சிறிய துண்டு, தோலுரித்த பூண்டு – 3 பல், பச்சைமிளகாய் – 2 அல்லது 3 சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு பின்ச் அளவு சிறிய துண்டு புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் அளவிற்கு வதக்கி விட்டு, இறுதியாக – 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலையையும், 1 கைப்பிடி அளவு மல்லித்தழையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கருவேப்பிலை, கொத்தமல்லி தழையும் ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதும். அதன் பின்பு, துருவி வைத்திருக்கும் தேங்காய் 1/2 கப், வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு, இந்த கலவையை ஆற வைத்துவிடுங்கள்.

chutney 3

மிக்ஸி ஜாரில் ஆறிய கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் கெட்டிப் பதத்தில் தண்ணீர் ஊற்றி, விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 2:
அதன் பின்பாக ஒரு கடாயில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, மல்லித் தூள் ஒரு ஸ்பூன் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு 10 லிருந்து 12 நிமிடம் வரை கொதிக்க விட்டால் போதும். சுவையான சூப்பரான கிரேவி தயார். அப்படியே பரிமாற வேண்டியது தான். இது மிகவும் வித்தியாசமான குறிப்பு. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்யக்கூடிய இந்த கிரேவியை இன்னைக்கு முயற்சி செய்து தான் பாருங்களேன்.

gravy

பின்குறிப்பு: உங்களுடைய வீட்டில் வறுத்த வேர்கடலை இல்லை என்றாலும் பரவாயில்லை, முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை சோம்பு ஜீரகம் தாளிக்கும்போது 4 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு அல்லது உளுத்தம்பருப்பு சேர்த்து கூட இந்த சட்னி தயார் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஹோட்டலில் சாப்பிடும் ‘நாண்’!, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -