ஹோட்டலில் சாப்பிடும் ‘நாண்’!, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா?

naan

நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும். நம்முடைய வீட்டிலேயே நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே!

naan4

Step 1:
இந்த குறிப்பில் நாண் செய்வதற்கு நாம் ‘ஈஸ்ட்’ பயன்படுத்த போகின்றோம். இப்போது எல்லா மளிகை கடைகளிலும், சூப்பர் மார்க் கெட்டிலும் ஈஸ்ட் சுலபமாகவே கிடைக்கின்றது. ஈஸ்ட் பயன்படுத்த வேண்டாம், என்று நினைப்பவர்கள், பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன், தயிர் – 1/2 கப் இந்த 3 பொருட்களையும், மைதா மாவோடு சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Step 2:
முதலில் ஒரு 1/2 டம்ளர் அளவு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, கரைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து கலக்கி, 5 நிமிடங்கள் வரை மூடி போட்டு வைத்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து ஈஸ்ட் பொங்கி தயாராகி இருக்கும்.

naan3

Step 3:
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் அளவு மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்தது தேவையான அளவு உப்பு, 1 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து, தயாராக இருக்கும் ஈஸ்டையும் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இந்த மாவு ரொம்பவும் இறுக்கமாக இருக்க கூடாது. சாஃப்டாக பிசைய வேண்டும்.

- Advertisement -

மாவை பிசையும் போது, கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு கையில் ஒட்ட தான் செய்யும். தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, உங்களது உள்ளங் கைகளால் அழுத்தி பிசைந்துவிடுங்கள். இறுதியாக அந்த மாவின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி தடவி, ஒரு மூடி போட்டு 2 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். ஈஸ்ட் சேர்த்து ஊறி மாவு நன்றாக உபிரியாக, உப்பி வந்திருக்கும்.

naan2

Step 4:
இப்போது நான் செய்வதற்கு மாவு ரெடி. இந்த மாவை லேசாக எடுத்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். அதன் பின்பு எப்பவும் போல சப்பாத்தி பலகையில் வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் மாவு தொட்டு தேய்த்தால் தான் நாண் நன்றாக வரும். ரொம்பவும் மெல்லியதாக தேய்த்து விடக் கூடாது. ரொம்பவும் தடிமனாகவும் தேய்த்து விடக் கூடாது.

naan1

தேய்த்த ரொட்டிகளை, தோசை கல்லில் போட்டு, வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தோசைக்கல் நன்றாக சூடானதும், தயாராக இருக்கும் நாண் ரொட்டிகளை கல்லில் போட்ட உடனேயே உப்பி வரும். எண்ணெய் ஊற்றக்கூடாது. மீண்டும் திருப்பி போட்ட உடன் மறுபக்கமும் நன்றாக வேக வேண்டும். அதன் பின்பு தோசைக்கல்லை, சிம்மில் வைத்துவிட்டு, இரண்டு பக்கங்களிலும் திருப்பிப்போட்டு நாண்னை வேகவைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் மேல் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி சுட சுட பரிமாறினால் சூப்பர் நாண் தயார்.

naan5

இதற்கு உங்களால் முடிந்தால் மஸ்ரூம் கிரேவி அல்லது பன்னீர் கிரேவி சைட் டிஷ் ஆக செய்துகொள்ளலாம். முடியாதவர்கள் வெஜிடபிள் குருமா செய்து சைட் டிஷ் ஆக வைத்துக் கொண்டாலும் கூட, ஹோட்டலில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
சப்பாத்தி மாவு, பூரி மாவு பிசைய, இனி கஷ்டப்பட வேண்டாம். ஒரு நிமிஷத்துல, கை படாமல், இப்படி பிசைஞ்சுக்கோங்க! செம ஐடியா இது. ட்ரை பண்ணி பாருங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.