வெறும் 5 நிமிடத்தில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற கருவேப்பிலை மட்டும் போதுங்க. இந்த ஹேர் டையில் 100% பக்க விளைவுகள் வராது.

white-hair
- Advertisement -

நூற்றில் எண்பது பேருக்கு இந்த நரைமுடி பிரச்சனை‌‌. என்ன செய்வது. காலம் மாற மாற ஆரோக்கியமும் அழகும் குறைந்து கொண்டே செல்கிறது. சீக்கிரம் நரைமுடி வருகிறது. சீக்கிரம் வயதான தோற்றம் தெரிகிறது. இதற்குக் காரணம் இப்போது எதைத் தொட்டாலும் கெமிக்கல். நாம் சாப்பிடும் உணவில் கூட முழுமையான இயற்கையான ஆரோக்கியம் கிடையாது. ஆரோக்கியமான உணவினை சாப்பிடுவது, கருவேப்பிலையை அதிகமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது, இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது, காய்கறிகள் கீரைகள் இவைகளை உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நரைமுடி வரலாம். அல்லது சில பேருக்கு பரம்பரை பரம்பரையாகவே நரைமுடி சீக்கிரம் வந்துவிடும். காரணங்கள் எதுவாக இருக்கட்டும், உங்களுக்கு நரைமுடி இருக்குதா. கண்ண மூடிட்டு இந்த கருவேப்பிலை ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

இரண்டு அல்லது மூன்று கைப்பிடி கருவேப்பிலைகள் நமக்கு தேவை. கருவேப்பிலைகளை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, அதை ஒரு துணியில் துடைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு மணி நேரம் ஃபேன் காற்றில் உலர வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாத பச்சை கருவேப்பிலை இருந்தாலே இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம். காய்ந்த கருவேப்பிலைகள் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த கருவேப்பிலையை போட்டு வறுக்க வேண்டும். எப்படி தெரியுமா. அப்படியே அந்த கருவாப்பிலை கருப்பு நிறம் வரும் அளவிற்கு வறுத்து விட்டு, நன்றாக ஆரவைத்து விடுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வறுபட்ட கருவேப்பிலைகளை போட்டு நைசாக பொடி செய்தால், கருப்பு கலரில் கருவேப்பிலை ஹேர் டை பவுடர் நமக்கு கிடைத்துவிடும்.

இந்த பவுடரை நன்றாக சலித்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. தலைக்கு குளித்துவிட்டீர்கள். பார்த்தா அங்கங்க வெள்ளை முடி தெரியுது. சட்டென இதை கருப்பாக மாற்ற வேண்டும். என்ன செய்றது. சட்டுனு ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து தயார் செய்த, கருவேப்பிலை பொடியை தேவையான அளவு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்து அந்த கருப்பு நிற டையை, வெள்ளை நிற முடியின் மேல் தடவி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் அந்த டை காய்ந்து விடும். பிறகு எப்போதும் போல தலை சீவிக் கொண்டு செல்லலாம். (தேவைப்பட்டால் இந்த கருவேப்பிலை ஹேர் டையை தேங்காய் எண்ணெயில் போட்டு கூட கலந்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம்.) ஆனால் மீண்டும் தலைக்கு குளிக்கும் போது இந்த கருப்பு நிறம் நீங்கிவிடும்.

- Advertisement -

இந்த கருவேப்பிலை பொடியை தடவ தடவ தான் உங்களுடைய நரை முடி கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரமாக கருப்பு முடியாக மாறும். வீட்டில் சும்மா இருக்கும் போது ஒரு சிறிய கிண்ணத்தில், தயார் செய்த கருப்பு நிற கருவேப்பிலை பொடி, ஆலோவேரா ஜெல், தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் கலந்து அப்படியே உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 1 மணி நேரம், 2 மணி நேரம் கூட அது அப்படியே தலையில் இருக்கட்டும். விட்டுவிடுங்கள். பிறகு ஜென்டில் ஆக ஒரு ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களுடைய தலைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இயற்கையான வழியில் நாம் செல்லும் போது அதில் இருந்து ரிசல்ட் கிடைக்க கொஞ்சம் நாட்கள் எடுக்கத்தான் செய்யும். நீங்க வேணும்னா இந்த குறிப்பா ட்ரை பண்ணி பாருங்க. மூன்று மாதத்தில் உங்களுடைய நரை முடியில் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -