இனி நமக்கு முடியே வளராது என்று முடிவு கட்டி, எல்லா முயற்சிகளையும் கைவிட்டவர்கள் இதை செய்தால் நிச்சயம் காடு போல முடி கருகருன்னு வளர தொடங்கிடும்.

hair14
- Advertisement -

எத்தனையோ விஷயங்களை செய்து பார்த்து விட்டேன். என் முடி வளரவே இல்லை. முடியை ஆரோக்கியத்தோடு வளர்ப்பதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு இந்த குறிப்பு. இதை நாம் ஹேர் பேக்காக போட போடுவது கிடையாது. ஒரு டம்ளர் ஜூஸ் தயார் செய்து குடிக்கப் போகின்றோம். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த தண்ணீரை மருந்து என்று குடித்து வந்தாலும் சரி, ஜூஸ் என்று நினைத்து குடித்து வந்தாலும் சரி, உங்களுடைய முடி கருகருவென மூன்றே மாதத்தில் காடு போல வளரத் தொடங்கி விடும். எந்தவித சந்தேகமும் தேவையில்லை. நம்பிக்கையோடு இந்த குறிப்பை பின்பற்றலாம்.

தலை முடி வளர்ச்சிக்கு கருவேப்பிலை சாறு தயார் செய்யும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருவேப்பிலை 2 கொத்து, தோல் சீவியை இஞ்சி 1/2 இன்ச், 1 ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை விழுதாக அரைத்து வடிகட்டினால் சூப்பரான ஒரு சாறு உங்களுக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

அதில் 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து கலந்து குடித்து விட வேண்டும். இதை காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம். அல்லது காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக குடிக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். கருவேப்பிலையை கொஞ்சம் இலசாக பார்த்து இதில் போட்டு அரைத்து குடித்தால் சுவை ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது. சுவை குடிக்கின்ற அளவுக்கு தான் இருக்கும். (கருவேப்பிலை, இஞ்சி, வெல்லம், எலுமிச்சம் பழச்சாறு இது அனைத்துமே முடி பிரச்சனைக்கு தீர்வை தடுக்கக்கூடிய பொருட்கள் தான். தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம்).

மேலே சொல்லி இருக்கும் குறிப்பு ஒரு மெத்தட். இதிலேயே இன்னொரு மெத்தடையும் முயற்சி செய்து பார்க்கலாம். அடுப்பில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கருவேப்பிலை 2 கொத்தை உருவி அதில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். கூடவே கால் ஸ்பூன் சீரகமும் சேர்த்து கொதிக்கவிட்டு, இதை வடிகட்டி வெதுவெதுப்பாகவும் குடித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதை கருவேப்பிலை டீ என்று வைத்துக் கொள்ளுங்கள். சீரகம் சேர்த்து இந்த தண்ணீரை குடித்தால் உடல் பருமனாக இருப்பவர்கள், உடல் எடையை குறைக்கவும் உபயோகமாக இருக்கும். எளிமையான குறிப்பு தான் செலவில்லாத குறிப்பு தான். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய குறிப்புகள் இவை.

இதையும் படிக்கலாமே: முகம் எப்போதும் இளமையாக இருக்க இரண்டு வாரம் மட்டும் இந்த நட்சத்திர சோம்பு பேஸ் பேக் போடுங்க. 60 வயசிலையும் 20 வயசு போல இளமையா இருக்க சூப்பர் ரெமிடி.

இந்த இரண்டு குறிப்புகளுமே  உங்களுக்கு பிடித்திருந்தால் மாற்றி மாற்றி கூட முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரிடம் ஒரு ஆலோசனையை கேட்டுக் கொண்டு இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கவும். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். நல்ல ரிசல்ட் மூன்றை மாதத்தில் கண்கூடாக காணும் அளவுக்கு இந்த குறிப்பில் பவர் அதிகம். தேவைப்படுபவர்கள் இந்த ரெசிபி முயற்சி செய்து பலன் பெறவும்.

- Advertisement -