இட்லி தோசைக்கு தினமும் 1 ஸ்பூன் இந்த கருவேப்பிலை பொடியை தொட்டு சாப்பிடுங்கள். இரும்பு சத்து அதிகரிக்கும் அதே சமயம் முடி வளர்ச்சியும் தடைபடாது.

curryleaves-podi
- Advertisement -

இந்த கறிவேப்பில்லையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இரத்த சோகை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் சார்ந்த பிரச்னைகளை சரி செய்யவும் இப்படி கூறி கொண்டே போனால், இந்த ஒரு பதிவு பத்தாது. தினமும் காலையில் ஒரு பத்து கறிவேப்பிலைலையை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்கள் முடி வளர்ச்சியை தடுக்க முடியாது. அந்த அளவிற்கு இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும்.

தேவையான பொருள்: உளுத்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு -1/2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – 5 கைப்பிடி அளவு, உப்பு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை.

- Advertisement -

முதலில் கருவேப்பிலையை நன்றாக அலசி உலர்த்தி ஈரம் இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு பேனை வைத்து அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். இதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.

மீண்டும் அதே பேனில் மல்லி விதை, சீரகம், மிளகு மூன்றையும் போட்டு, நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்து விடுங்கள். மறுபடியும் அதே பேனில், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பின் அலசி ஆற வைத்த கருவேப்பிலையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள ஈரம் அனைத்தும் போகும் அளவுக்கு நன்றாக கறிவேப்பிலை மொறு மொறுவென்று வறுக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், சேர்த்து இவைகளுடன் கருவேப்பிலையும், ஒரு சிட்டிகை பெருங்காயம், கால் டீஸ்பூன் உப்பு, அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசான பவுடராக வேண்டாம். சற்று கொரகொரப்பாகவே இருக்கட்டும். அரைத்து எடுத்த பொடியை ஒரு பேப்பரை விரித்து அதில் கொட்டி சிறிது நேரம் ஆற வைத்த பின் ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் டிபனுக்கு இனி சட்னி, சாம்பார் போன்றவைகளை தேட தேவை இல்லை. இந்த கருவேப்பிலை பொடியே, பக்காவான சைடிஷ். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனையா? அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு உங்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதே நேரத்தில் இந்த கறிவேப்பிலை உடலுக்கும் அவ்வளவு நல்லது. உங்களுக்கு இந்த சுலபமான குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -