ரேஷனில் கிடைக்கும் அரிசியும், துவரம் பருப்பும் இருந்தா நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியான இந்த தோசை சுட்டு சாப்பிடலாம். அட்டகாசமான இந்த தோசைக்கு சைடிஸ் கூட தேவையில்லை.

dosai
- Advertisement -

தோசைன்னா பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மற்ற டிபன் வகைகள் கூட வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லுவர்களே தவிர தோசையை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அதே நேரத்தில் தினமும் தோசை என்றாலும் சாப்பிட கூடியவர்களும் அநேகம் பேர் உள்ளனர். இந்த வகையில் எப்போதும் போல இல்லாமல் ரேஷனில் கிடைக்கும் அரிசி பருப்பு இரண்டையும் வைத்து ஒரு அட்டகாசமான தோசை ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக ரேஷன் அரிசியையும் பருப்பையும் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. பலர் இதையே தான் உணவாகவே பயன்படுத்துகிறார்கள் அதையும் இல்லை என்று மறுப்பதர்க்கு இல்லை. ஆனால் இதை வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் கூட எந்த முறையில் பயன்படுத்தி நல்ல ஒரு சத்துமிக்க உணவாக எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு.

- Advertisement -

செய்முறை

தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் ரேஷன் புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு இரண்டு மூன்று தடவை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ரேஷன் துவரம் பருப்பையும் கால் கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதையும் சுத்தம் செய்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள்.

ஊற வைத்து இந்த அரிசி பருப்பில் ஐந்து காய்ந்த மிளகாய் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து மூன்று மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது இரண்டையும் தனிமையாகவும் ஊற வைத்துக் கொள்ளலாம். அரிசி பருப்புடனும் ஊற வைத்துக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் ஊற வைத்து அரைக்கும் போது இது நன்றாக மசிவதுடன் சுவை இன்னுமே கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

- Advertisement -

இப்போது மூன்று மணி நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் நாம் ஊற வைத்து அரிசி பருப்பு இரண்டையும் தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு, இதில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா ஊற வைத்த தண்ணீரே ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு எப்போதும் நாம் தோசைக்கு அரைப்பது போலவே அரைத்தெடுத்து தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைத்து விடுங்கள்.

இப்போது இந்த மாவில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் கலந்து இதற்கு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் திக்காக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை உடனே தோசை ஊற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: மாங்காய் சீசன் முடியறதுக்குள்ள இப்படி ஒரு முறை புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாத்துடுங்க. அட டேஸ்ட் அட்டகாசமா இருக்கே அப்படின்னு நிச்சயமா பீல் பண்ணுவீங்க.

அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் தோசை ஊற்றுவது போல இந்த மாவை எடுத்து ஊற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சுட்டு எடுத்து விடுங்கள். நல்ல மொறு மொறுவென்று கிறிஸ்பியான தோசை தயார். இதே மாவை கொஞ்சம் கெட்டியாக அரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் சேர்ந்து அடை தோசை போலவும் செய்து சாப்பிடலாம் அதுவும் நன்றாக இருக்கும். இந்த சிம்பிளான தோசை ரெசிப்பியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -