பூஜை அறையில் இருக்கும் இந்த பொருட்களை எல்லாம் நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள்? குறிப்பாக இந்த 5 பொருட்களை எப்படி வைத்தால் வீட்டில் மங்களம் உண்டாகும்.

poojai-turmeric

பூஜை அறை என்றாலே மங்களத்தைக் குறிப்பது. ஒரு வீடு மங்களகரமாக இருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களும் பூஜைப்பொருட்களும் சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும். அந்த வரிசையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய சுவாமியின் திருவுருவப் படங்கள் எப்படி இருக்க வேண்டும். பூஜைக்கு பயன்படுத்த கூடிய பொருட்களை நாம் எப்படி பராமரித்து வைக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

பூஜை அறை என்று சொன்னதும் நிச்சயமாக கட்டாயமாக இருக்க வேண்டிய படம் என்றால், அது அந்த வீட்டின் உடைய குலதெய்வம். குலதெய்வத்தின் படம் இல்லாமல் ஒரு வீட்டின் பூஜை அறை அமைந்திருக்கக் கூடாது என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் இது எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த அளவிற்கு குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அந்த குலதெய்வத்திற்கென்று தினமும் எந்த வீட்டில், ஒரு சிறிய மண் அகல் விளக்கில், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வருகிறார்களோ, அந்த வீட்டில் மலையளவு பிரச்சினை எதுவும் வராது. அப்படி வந்தாலும் அது விரைவிலேயே கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும்.  எந்த பிரச்சனையும், நம் குடும்பத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பழக்கம் இருந்தால், முடிந்தவரை அந்த விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் கையால் வெள்ளி காமாட்சி விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் மங்களகரம், லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தவறும் இல்லை.

நம்முடைய வீட்டு பூஜை அறை என்றால் அடிப்படையாக இருக்க வேண்டிய பொருட்கள். மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அட்சதை, நிச்சயம் இது ஒரு வீட்டுப் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டும், குறையாமல் இருக்க வேண்டும். முடிந்தால் ஒரு சிறிய தாம்புல தட்டில் சிறிய 5 கிண்ணங்களை வைத்து, அது நிரம்ப மஞ்சள் குங்குமம் சந்தனம் (சந்தனத்தை தண்ணீரோ அல்லது பன்னீர் ஊற்றி குழைத்து வைக்க வேண்டும். காய்ந்துபோய் இருக்கக்கூடாது.) விபூதி, அட்சதையை ஒன்றாக சேர்த்து தாம்பூலத் தட்டில் வைத்து மகாலட்சுமி திருவுருவப் படத்திற்கு முன்பாக வைப்பது வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை தேடித்தரும்.

- Advertisement -

நீங்கள் தினந்தோறும் குளித்து முடித்து, சுத்தமாகி விட்டு, உங்களது பூஜை அறையில் இருக்கும் இந்த தாம்பலத்திலிருந்து நெற்றியில் இட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும் இந்த தாம்புல தட்டில் இருந்து மஞ்சள் குங்குமம் கொடுக்கலாம்.

velli vilaku

இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, தினம்தோறும் பெண்கள், வீட்டு பூஜை அறையில் நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும். நமஸ்காரம் செய்யும்போது பூமாதேவியை உங்களது வலது கை மோதிர விரலால் தொட்டு, குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து நெற்றியில் ஒற்றிக் கொள்ளுங்கள். வீட்டில் மங்களம் உண்டாகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பூஜை அறையில் இந்த 3 கோலங்களை போட்டால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.