பூஜை அறையில் இந்த 3 கோலங்களை போட்டால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள்!

pooja-room-kolam
- Advertisement -

பூஜையறையில் இந்த மூன்று கோலங்களை பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் போடுவார்கள். எதற்காக குறிப்பிட்ட இந்த மூன்று கோலங்களை பூஜை அறையில் போடுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்கும், இந்த மூன்று கோலங்களை பற்றிய விவரங்கள் தெரியாதவர்களுக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். கோலம் போடுவது தெய்வங்களை நம் வீட்டிற்குள் வரவழைப்பதற்கு தான். காலையில் எழுந்ததும் முதல் வேலையே இதை செய்வதற்கு இது தான் காரணம். எந்த ஒரு வீட்டில் தினமும் தவறாமல் கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ! அந்த வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். அவ்வகையில் அந்த மூன்று கோலங்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

aiswarya-kolam

1. ஐஸ்வர்ய கோலம்:
முதலாவதாக ஐஸ்வர்ய கோலம் எனப்படும் ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வீக கோலம். சகல ஐஸ்வர்யம் கிடைக்க இந்த கோலத்தை பூஜையறையில் போடுவது வழக்கம். மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் ஐஸ்வர்ய கோலத்தை போடுவதும் பெரிய சிரமம் இல்லை. மிக மிக சுலபமாக போட்டு விடலாம். வீட்டில் முக்கிய விசேஷ தினங்களில் இந்த கோலத்தை போடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அது மட்டுமல்ல செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்பொழுதும் பூஜை அறையில் இந்த மூன்று கோலங்களில் ஏதாவது ஒன்றை போட்டு வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த கோலத்தை போட்டு முடித்த பின் படத்தில் காட்டியுள்ளபடி ஐஸ்வர்யம் என்று சுற்றிலும் எழுதிக் கொள்ளுங்கள். இதனை ஸ்டிக்கராக வாங்கி ஒட்டுவதை விட பச்சரிசி கலந்த கோல மாவில் நீங்களே கோலம் போட்டால் பலன்களும் அதிகம் உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

hridaya-kamalam-kolam1

2. ஹ்ருதய கமலம் கோலம்:
இரண்டாவதாக ஹ்ருதய கமல கோலம் எனப்படும் அஷ்ட ஐஸ்வர்யத்தையும், செல்வ வளத்தை பெருக்க கூடியதுமான அற்புதமான தெய்வீக கோலம். இந்த கோலம் போடுவதற்கு சற்றே சிரமமாக இருக்கும் என்றாலும் கற்றுக் கொண்டால் எளிதானது தான். வீட்டில் பண ரீதியான பிரச்சனைகள் மேலோங்கும் பொழுது இறைவனை நாடி நாம் பிரார்த்தனைகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹ்ருதய கமல கோலம் பூஜை அறையில் போடுவதால் பண பிரச்சினை ஏற்படாது என்பது ஐதீகம்.

- Advertisement -

அத்தகைய சக்தி வாய்ந்த இந்த கோலத்தை வாசலில் போடக்கூடாது. ஹ்ருதய கமல கோலத்தை பொறுத்தவரை இதனை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோலங்களை தெய்வீக கோலமாக குறிப்பிடுவதால் மற்றவர்களின் கால்களில் மிதிபடுவது நல்லதல்ல. எப்பொழுதும் கோலம் போடும் பொழுது இறைவனின் உருவப்படத்தை வாசலில் போட்டு மற்றவர்களின் கால்களை மிதிபடும்படி வரையக் கூடாது.

lakshmi-kubera-kolam

3. லக்ஷ்மி குபேர கோலம்:
மூன்றாவதாக லக்ஷ்மி குபேர கோலம் மிகவும் விசேஷமானது. பூஜை அறையில் போடப்படும் கோலங்களில் லக்ஷ்மி குபேர கோலம் மிகவும் எளிதானது. லக்ஷ்மி, குபேரன் என்பது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமியையும், குபேரனையும் குறிப்பது. எனவே இந்த லக்ஷ்மி குபேர கோலத்தை போடுவதால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி, மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் லக்ஷ்மி குபேர கோலத்தைப் போட்டு பூஜை அறையை அலங்கரிப்பது சுபீட்சத்தை உண்டாக்கும். பூஜை அறையில் போடப்படும் கோலத்திற்கு பூக்களால் அலங்கரிப்பது மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -