உங்கள் குடும்பத்தில் வளமை பெருக, தம்பதிகள் ஒற்றுமை கூட ஸ்தோத்திரம் இதோ

guru bagavan

மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு குணங்களை கொண்டவர்கள் என்பது எதார்த்தம். அதிலும் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் வெவ்வேறு வகையான எண்ணங்கள், சிந்தனைகள், விருப்பங்கள் இருக்கின்றன. இத்தகைய வேறுபாடுகளால் ஆண், பெண் இணைந்து வாழும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. இவற்றையெல்லாம் தீர்க்கும் “தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்” இதோ.

Guru Dhatchinamurthy

தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

வாமோரூ பரிஸம்ஸ்திதாம் கிரிஸு தாமன்யோன்யமா
லிங்கிதாம் ஸ்யாமா முத்பலதாரிணீம் ஸஸிநி
பாஞ்சாலோகயந்தம் ஸிவம் ஆஸ்லிஷ்டேன கரேண

புஸ்தகமதோ கும்பம் ஸுதாபூரிதம் முத்ராம்
ஞானமயீம் ததானமபரை முக்தாக்ஷமாலாம் பஜே
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.

dhakshinamoothi

தாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்தியாக இருக்கும் சிவனை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் துதித்து வருவது நலம். வியாழக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விக்ரகம் முன்பாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தை துதித்து வழிபடுவதால் தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

dhatchinamoorthi

தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே தங்களுக்கு நமஸ்காரம் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dakshinamurthy stotram in Tamil. It is also called as Dhatchinamoorthy mantra in Tamil or Thambathigal mantra in Tamil or Sivan manthirangal in Tamil or Dhatchinamoorthy manthiram in Tamil.