கோபம் நீங்கி, பொறுமை குணம் பெற இந்த துதியை கூறுங்கள் போதும்

dhakshinamoorthi-logo-compressed

ஒரு விடயத்தை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற அவசரப்படாமல் பொறுமையாக இருக்கும் குணம் நமக்கு மிகவும் அவசியமாகும். எதிலும் அவசரப்படும் குணம் நமக்கு இருப்பதால், நமது மன சமநிலையை இழந்து, அடிக்கடி மிகுந்த கோபம் கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய குணங்கள் நமக்கு கெடுதல்களை அதிகம் செய்யும். சிவபெருமானின் மற்றொரு கருணை நிறைந்த உருவம் தான் “தக்ஷிணாமூர்த்தி”. மேலே கூறப்பட்ட பிரச்சனைகள் நீங்க தக்ஷிணாமூர்த்தியின் துதி இதோ

Guru Dhatchinamurthy

தட்சிணாமூர்த்தி துதி

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லமா யல்லதுமா யிருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாம்
னினைந்துபலத் தொடக்கை வெல்வாம்

dhatchinamoorthi

தாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்தியின் அருளை தரும் மந்திர துதி இது. இத்துதியை அனைவரும் தினந்தோறும் துதித்து வருவது சிறந்தது. வியாழக்கிழமைகளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதியில், விளக்கேற்றி இத்துதியை 9 அல்லது 27 எண்ணிக்கையில் துதித்து தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவதால் அனைத்திலும் உண்மை நிலையை புரிந்து கொள்ளும் அறிவாற்றல் மேம்படும். அதிகம் கோபப்படும் குணம் நீங்கும். எல்லா விடயங்களிலும் சமநிலையை கடைபிடிக்கும் குணம் ஏற்படும்.பொறுமை குணம் அதிகரிக்கும்.

- Advertisement -

dhakshinamoothi

பெரும்பாலான மனிதர்கள் எந்த ஒரு விடயத்திலும் அவசரப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிறிது பொறுமையை கடைபிடித்து ஒன்றின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளாமல் அதீத உணர்ச்சி வசப்படுகின்றனர். எந்த ஒன்றிலும் ஒரு வரைமுறை வைத்துக்கொள்ளாமல் அதில் அளவுக்கதிகமாக ஈடுபட்டு துன்புறுகின்றனர். உலகத்தை காக்கும் ஈசன் ஆகிய சிவபெருமான் உயிர்களின் மீது தாட்சண்யம் நிறைந்த தக்ஷிணாமூர்த்தி ஆவார். அவரை இந்த துதியை கொண்டு வழிபடுவதால் அவரின் முழுமையான அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
பெருமாள் 108 போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள், ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dakshinamurthy thuthi in Tamil. It is also called as Dakshinamurthy mantra in Tamil or Dakshinamurthy slogam in Tamil or Dakshinamurthy slokam in Tamil.