பெருமாள் 108 போற்றி

Perumal-1-1

ஆசைகள் மற்றும் விருப்பங்களை இல்லாத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. பிறருக்கு எந்த வகையிலும் கெடுதல் செய்யாத எந்த ஒரு ஆசைகள் மற்றும் விருப்பங்களும் ஒருவருக்கு இருப்பதில் தவறில்லை. நமது இந்த மன விருப்பங்கள் நிறைவேற என்ன தான் முயன்றாலும், சில சமயம் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படுகின்றன.தெய்வ சங்கல்பம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நல்லவைகள் அனைத்தையும் பக்தர்களுக்கு அருள்பவர் நாராயணன் ஆகிய பெருமாள். அவரை போற்றும் 108 போற்றி துதிகள் இதோ.

perumal

பெருமாள் 108 போற்றி

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி

ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி

ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழைப்பங்காளா போற்றி
ஓம் எழில்நிற வண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருடவா கனனே போற்றி
ஓம் கல்யாணமூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி

perumal

ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா-முகுந்தா போற்றி
ஓம் சர்வலோ கேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்காரமூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி

ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி

ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி
ஓம் தயாநிதி -ராமா போற்றி
ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி

perumal

ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா- கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி

ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி

ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் பவளம் போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்குசக் கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் லோலா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் 90 போற்றி
ஓம் வேணுகோ பாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி

ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் மனநிலை தருவாய் போற்றி
ஓம் விஜயரா கவனே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்தசா ரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்

மகாவிஷ்ணுவான பெருமாளை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த 108 போற்றி துதிகளையும் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், நீர் கூட அருந்தாமல் பூஜையறையில் உள்ள பெருமாளின் படத்திற்கு பூக்களை வைத்து, பஞ்சதீப எண்ணெய் தீபம் ஏற்றி, பால் அல்லது பழத்தை நைவேத்தியமாக வைத்து இந்த 108 போற்றி துதிகளை பாடி வந்தால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் விருப்பங்களில் இருந்த தடை, தாமதங்களை நீக்கி, விரைவில் அவற்றை நிறைவேற்றுவார் பெருமாள்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசை உண்டு. இந்த ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் அனைவருமே, அவர்களால் ஆன முயற்சிகளை செய்கின்றனர். இருந்தாலும் அவர்களின் மன விருப்பங்கள் மட்டும் நிறைவேறுவதில் தாமதங்கள் மற்றும் தடைகள் உண்டாகிறது. வைதாரையும் வரவேற்கும் வைகுண்டத்தின் அதிபதியான “மகாவிஷ்ணு” ஆகிய பெருமாள், தன்னை வழிபடும் பக்தர்களின் அனைத்தையும் நிறைவேற்றுபவர் ஆவார். அவரை போற்றி இயற்றப்பட்ட இந்த மந்திர துதிகளை படிவருவது உங்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.

இதையும் படிக்கலாமே:
கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Perumal 108 potri in Tamil. It is also called as perumal potri lyrics in Tamil or Thirumal 108 potri in Tamil or Elumalaiyan potri in Tamil