பெண்கள் செய்யும் இந்த செயல்கள் குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

women-sleep
- Advertisement -

தெரிந்தோ, தெரியாமலோ இன்றைய பெண்கள் செய்யும் சில தவறுகள் அந்த குடும்பத்தின் லட்சுமி கடாட்சத்தை சீர்குலைக்கிறது. அந்தக் காலம் முதல் முன்னோர்கள் கடைபிடித்து வந்த சில விஷயங்களை இன்றைய கால பெண்கள் சரியாக கடைபிடிப்பது இல்லை. அதற்கு அவர்களுடைய வேலை பளு, சோம்பேறித்தனம் காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் இது குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது தான் கசப்பான உண்மை. சிறு சிறு விஷயங்களை நாம் சரி செய்து கொள்வதன் மூலம் குடும்பத்திற்கு நன்மைகள் உண்டாகும் என்றால், அதை ஏன் செய்யக்கூடாது? அப்படி என்ன தவறுகள் தரித்திரத்தை ஏற்படுத்தும்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

kolam

முதலாவதாக பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு காலையில் எழுந்து வாசல் தெளிப்பதில் ஆரம்பிக்கிறது. உங்களை அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளிக்க வேண்டும் என்று கூற வரவில்லை. நீங்கள் எப்பொழுது எழுந்தாலும் முதலில் கதவு, ஜன்னல்களை திறந்து விட்டு நல்ல அதிர்வலைகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன்பின் வாசலை சுத்தம் செய்து கோலம் போட வேண்டும். இதை செய்த பின் தான் வேறு எந்த காரியமானாலும் நீங்கள் செய்ய வேண்டும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது.

- Advertisement -

அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் யாராவது வெளியே செல்ல வேண்டும். அல்லது வேலைக்கு போக வேண்டும், வெளியூர் செல்ல வேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்றால் அவர்கள் சென்ற பிறகு வாசல் தெளிக்க கூடாது. அதற்கு முன்னரே வாசல் தெளித்து, கோலமிட்டு விட வேண்டும். அவர்கள் சென்ற பின் நாம் வாசல் தெளிப்பது நம்முடைய குடும்பத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. அது தரித்திரத்தை உண்டாக்கும் என்பார்கள். இந்த தவறை இன்று பலரும் செய்து வருகிறார்கள். அதை மாற்றிக் கொள்வது நல்ல பலன்களை தரும்.

kuthu-vilakku

அதுபோல் குடும்பப் பெண் எப்பொழுதும் வளையல் இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது. நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருப்பதால் வளையல்களை கழற்றி வைத்து விட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் விளக்கேற்றும் சமயத்தில் வளையல் போட்டு கொண்டு விளக்கு ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வளையல் இல்லாமல் நீங்கள் ஏற்றும் விளக்கில் எந்த பிரயோஜனமும் இல்லை. இவை தெரியாமல் செய்தாலும் பாவச் செயலாகவே சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுபோல் விளக்கு ஏற்றும் சமயத்தில் வீட்டில் இருக்கும் நபர்கள் யாராவது வெளியே செல்ல இருக்கிறார்கள் என்றால் அவர்கள் செல்லும் முன்னரே விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும். அவர்கள் போன பிறகு உடனே வந்து விளக்கு ஏற்றுவது முறையாகாது. இதனால் தரித்திரம் உண்டாகும் என்பார்கள்.

kamatchi-vilakku

நாள் முழுவதும் சமையல் வேலை, வீட்டு வேலை என்று பார்த்து கொண்டிருப்பவர்கள் மாலை வேளையில் அசதியாக இருப்பார்கள். விளக்கு ஏற்றும் நேரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமையாக இல்லை என்றாலும் ஓய்வு எடுத்துக் கொள்ள படுத்து தூங்கக் கூடாது. விளக்கு ஏற்றும் நேரம் என்பது ஐந்தரை முதல் ஏழரை மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் குடும்பப் பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள காலை நீட்டிக்கொண்டு வீட்டில் படுத்துக் கொள்வது, குடும்பத்திற்கு தரித்திரத்தை உண்டாகும். அதற்கு முன்னரே ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. அல்லது ஏழரை மணிக்கு மேல் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

sleeping

உடல் நிலை சரி இல்லை, மிகவும் மோசமாக உடல் இருக்கிறது என்றால் பரவாயில்லை. சாதாரண நேரத்தில் இந்த தவறை செய்வதால் குடும்பத்திற்கு தரித்திரம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதெல்லாம் மிக சிறிய விஷயங்கள் தான். ஆனால் சோம்பேறித்தனப்பட்டு இந்த தவறுகளை செய்வதால் நிறைய வீட்டில் பணப் பிரச்சனை, கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் நிச்சயம் புதிய மாற்றம் உருவாகும்.

இதையும் படிக்கலாமே
குத்துவிளக்கு இருக்கும் பொழுது, காமாட்சி அம்மன் விளக்கு எல்லோர் வீட்டிலும் ஏற்றுவதன் உண்மை காரணம் என்ன தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -