ஒருவருடைய முகத்தை நாம் பார்க்கும் பொழுது அந்த முகத்தில் முதலில் நாம் பார்க்கக்கூடிய உறுப்பு எது என்றால் அது கண்கள் தான். பலரும் கண்களை பார்த்து தான் பேசுவார்கள். அப்படிப்பட்ட கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே இருக்கும். கருவளையத்தை நீக்க வேண்டும் என்பதற்காக பல க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அந்த கருவளையம் ஏற்படுவதற்குரிய காரணம் என்ன என்பதை அறிந்து அதை சரி செய்தால் தான் அதற்கு நிரந்தரமான தீர்வு என்பது கிடைக்கும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் கருவளையம் ஏற்படுவதற்குரிய காரணம் மற்றும் அதை நீக்குவதற்குரிய வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக கருவளையம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் ஒரு காரணமாக திகழ்கிறது. தூக்கமின்மையும் இதற்கு ஒரு காரணம் தான். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையம் ஏற்படும். செரிமானத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் கருவளையம் உண்டாகும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் கருவளையம் ஏற்படும். குடலில் புண்கள் இருந்தாலும் கருவளையம் உண்டாகும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கருவளையம் ஏற்படும். கிட்னியில் ஏதேனும் கிருமி தொற்று இருந்தாலும் கருவளையம் உண்டாக்கும். இந்த பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று உடலில் இருந்தால் கண்டிப்பாக முறையில் அவர்களுக்கு கருவளையம் உண்டாகும். இந்த பிரச்சினைகளை சரி செய்தால்தான் அந்த கருவளையம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நாம் முதலில் நம்முடைய ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். ரத்தத்தை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது மஞ்சள். இன்னும் குறிப்பாக கருமஞ்சள் அதிக அளவு சக்தி கொண்டதாக திகழ்கிறது. கருமஞ்சளை பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு படுக்க செல்வதற்கு முன் பசும்பாலில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்து கலந்து தினமும் குடித்து வர மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இது உதவும்.
அடுத்ததாக நம்முடைய கண்களை சுற்றி நாம் கஸ்தூரி மஞ்சள், ஒரு சொட்டு தேன், பால் போன்றவற்றை கலந்து போடுவதன் மூலம் கருவளையம் நீங்கும். மேலும் உடல் வறட்சியால் கருவளையம் ஏற்பட்டிருக்கிறது என்பவர்களும், கண்களில் எப்பொழுதும் ஒருவித உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்களும் விளக்கு எண்ணெயில் மஞ்சள் தூள் அல்லது குப்பைமேனி பொடியை சேர்த்து நன்றாக கலந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் கண்களை சுற்றி தடவி விட்டு படுத்து உறங்கலாம்.
இதேபோல் திரிபுலா பொடியில் நெய் சேர்த்து நன்றாக கலந்து அதையும் கண்களை சுற்றி தடவிக்கொண்டு உறங்கச் செல்லலாம். இவை இரண்டும் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் குங்குமாதி தைலத்தை வாங்கி கண்களை சுற்றி தடவியும் படுத்து உறங்கலாம். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுவது நல்ல பலனை தரும். மேலும் இந்த கருவளைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிக அளவில் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பப்பாளி, அண்ணாச்சி, கருப்பு திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவதும் அதன் ஜூஸ்களை குறிப்பதும் விரைவிலேயே கருவளையத்தை நீக்கும்.
இதையும் படிக்கலாமே: கருவளையம் மறைய டிப்ஸ்
சருமத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது நம்முடைய உடல் உள்ளுறுப்பில் இருக்கக் கூடிய பிரச்சனையின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்து கொண்டால் நம்முடைய உடலையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் சருமத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.